விரைவில் ‘காலா’ போன்ற காளான்கள் காணாமல் போய்விடும் – அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..!


அமைச்சர் ஜெயக்குமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார் அதில் சென்னை பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்கிறது. பெண்கள் வாழ்வதற்கான பாதுகாப்பான நகரமாக சென்னை, கோயம்புத்தூர் இருந்து வருகிறது என்றார்.

எம்.ஜி.யார் தன் படங்கள் மூலம் சீர்திருத்த கருத்துகளையும் மக்களுக்கு நல்ல கருத்துகளை கூறி நடித்துள்ளார். ஆனால் ரஜினிகாந்த் போல சிகரெட்டை தூக்கி போட்டு பிடித்தோ, மூக்கு வழியாக புகை பிடித்தோ காட்டியதில்லை என்றார்

காலா போன்ற காளான்கள் காணமல் போய்விடும் சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் எந்தக்கருத்தை ரஜினிகாந்த் தன் படத்தின் மூலம் தெரிவித்துள்ளார். அரசியல் சந்தர்பத்துக்காக தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

திரைப்படம் மூலம் மக்களை தூண்டிவிட நினைத்தால் அரசு ஏற்காது. காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென ரஜினிகாந்தை ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!