பள்ளிக்கு சென்ற 3 வயது மாணவன் மரணம்… பெற்றோர் அதிர்ச்சியில்!


தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் பலியான சம்பவம் அனைவரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மெட்ச்சல் மாவட்டத்தில் உள்ள மால்கச்கிரி நகரில் பச்பன் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் தண்ணீர் வசதிக்காக நிலத்திற்கு அடியில் பெரிய தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது.

செவ்வாய்க் கிழமை அன்று அப்பகுதியில் குடிநீர் வழங்கும் நாள் என்பதால் அந்த தொட்டி திறந்து வைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டு கொண்டிருந்தது. அப்போது பள்ளியில் பயிலும் சிவா ரச்சித் என்ற 3 வயது மாணவன் வகுப்பறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தான்.


வழியில் தொட்டி திறந்துள்ளது கவனிக்காமல் தவறி விழுந்தான். மாணவன் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை. சிறுது நேரம் கழித்து தண்ணீர் தொட்டியில் மாணவனின் செருப்பு மற்றும் புத்தகப்பை மிதப்பதை கவனித்தனர்.

இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது மாணவன் நீரில் மூழ்கி பலியானது தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மாணவனின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த துயரச்சம்பவத்தை அறிந்த சிறுவனின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போகினர். காலையில் பள்ளிக்கு சென்ற மகன் இறந்தததை எண்ணி கண்ணீர் கடலில் மூழ்கினர்.

சிறுவனின் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பற்றதன்மையே சிறுவன் மரணத்திற்கு காரணம் என பள்ளி வாசல் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!