சிகிச்சைக்கு சென்ற பெண்ணை ஆஸ்பத்திரியில் கற்பழித்த வார்டு-பாய்..!


தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள பன்ஜாரா கில்ஸ் போலீஸ் நிலையத்துக்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து ஒரு புகார் கொடுத்தார்.

தனது கணவர் தன்னை சரமாரியாக அடித்து உதைத்தார் என்றும், அதில் தனது கை ஒடிந்து விட்டதாகவும் அவர் புகார் அளித்தார். அதை ஏற்றுக்கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பிறகு போலீசார் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். போலீசார் புறப்பட தாமதம் ஆனதால் அந்த பெண் போலீசாரிடம் இருந்து கடிதம் பெற்றுக்கொண்டு உஸ்மானியா மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். கையில் கட்டு போட்ட பிறகு வீட்டுக்கு செல்லும்படி அந்த பெண்ணிடம் டாக்டர்கள் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு இரவில் எப்படி தனியாக செல்வது என்று தயங்கிய அந்த பெண் மருத்துவமனை வரவேற்பு அறையில் இருந்தார்.

இரவில் அந்த பெண் தனியாக இருப்பதை வார்டு-பாய் நாகராஜ் என்பவன் தெரிந்து கொண்டான். அவன் அந்த பெண்ணிடம், “டாக்டர் உன் கையை மீண்டும் சோதித்து பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். முதல் மாடிக்கு வா” என்று அழைத்து சென்றான்.

அங்குள்ள ஒரு தனி அறைக்குள் அந்த பெண்ணை தள்ளி நாகராஜ் மிரட்டி கற்பழித்தான். பிறகு அந்த பெண்ணை எச்சரித்து விட்டு சென்று விட்டான்.

இதுபற்றி அந்த பெண் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வார்டு-பாய் நாகராஜை கைது செய்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!