வெளிநாட்டு ஆண் சுற்றுலா பயணியை அந்த மாதிரி உறவுக்கு அழைத்த ஓட்டல் ஊழியரால் சர்ச்சை..!


உ.பி.யில் தான் இந்த கூத்து. சமீப நாட்களாக சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான பல்வேறு சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் உ.பி மாநிலம் காஜியாபாத்தில் ஆண் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் தன்னை ஓட்டல் ஊழியர் மானபங்கம் செய்ததாக பகீர் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

55 வயதான ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணியான அவர் கடந்த சில நாட்களாக காஜியாபாத் ஓட்டலில் தங்கியுள்ளார். சம்பவம் நடந்தன்று உடற்பயிற்சி ஆடை அணிந்து ஜிம்முக்கு கிளம்பும் போது அந்த ஓட்டலில் பணி புரியும் ஆண் ஊழியர் திடீரென அறைக்குள் நுழைந்துள்ளார். ஒரு மாதிரி சிரித்தபடியே ஜெர்மன் பயணியை கட்டிப்பிடித்து தொடக்கூடாத இடங்களில் தொட்டு சில்மிஷம் செய்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த ஜெர்மனிக்காரர் கூச்சல் போட்டு தப்பி வெளியே ஓடி வந்து ஓட்டல் நிர்வாகத்தில் முறையிட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருக்கவே போலீசுக்கு சென்று புகார் செய்தார். இதனெயடுத்து போலீசார் அந்த ஓட்டல் இளைஞர் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டு ஆண் சுற்றுலா பயணியை மற்றொரு ஆண் ஊழியர் மானபங்கம் செய்ய முயன்ற சம்பவம் உ.பி.யில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!