ஓடும் ரயிலில் காண்டிராக்டர் செய்த கேவலமான செயல் அம்பலம்..! – வீடியோ இணைப்பு!


இந்தியாவில் ஓடும் ரயிலில் ஊழியர்கள் சிலர் கழிவறை நீரை பயன்படுத்தி பொதுமக்களுக்கு டீ பரிமாறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாக இந்திய ரயில்களில் ரயில்வே நிர்வாகத்தின் அனுமதியுடன் டீ மற்றும் உணவு பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் டீ விற்பனையாளர்கள் சிலர் தொடர்பில் இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்று பார்வையாளர்களுக்கு குமட்டல் எடுக்கும் அளவுக்கு உள்ளது.

இந்த ரயிலானது தெலுங்கானா பகுதி வழியாக செல்லும் பயணிகள் ரயில் என கூறப்படுகிறது. இந்த வீடியோவை சென்னை சென்ட்ரல்- ஐதராபாத் செல்லும் சார்ம்,இனார் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணியால் எடுக்கப்பட்டு உள்ளது. அதில் நீல வண்ண சட்டை அணிந்த சில ஊழியர்கள் கழிவறையில் இருந்து தண்ணீரை கொண்டு டீ தயாரித்து பொதுமக்களுக்கு பரிமாறுவதாக உள்ளது. குறித்த வீடியோவை பதிவு செய்த நபர், கழிவறையில் சென்று அது அங்குள்ள தண்ணீர் தான் என்பதையும் உறுதி செய்துள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவானது இனிமேல் இந்திய ரயில்களில் உணவு அல்லது டீ போன்ற பதார்த்தங்களை பொதுமக்கள் நம்பி வாங்குவார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சுத்தமான உணவு மற்றும் சுகாதார நிலைமைகளுக்கு உறுதுணையாக இந்திய ரயில்வே தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த மாதம் ரெயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் விற்பனையாளர்களிடம் அளவு குறைவாக இருக்கலாம், ஆனால் உணவு மற்றும் பானங்கள் தரம் குறைந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இருந்தார்.

விமானப் போக்குவரத்துத் துறையில் தற்போது இருக்கும் கேட்டரிங் மாதிரியை இந்திய ரயில்வே நடைமுறைபடுத்தபோவதாக கூறப்படுகிறது. கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஓடும் ரயிலில் கழிவறை நீரை பயன்படுத்தி டீ தயாரித்த விவகாரத்தில் அந்த காண்டராக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!