சிகிச்சைக்கு வந்த இளம் பெண் மரணம் – மருத்துவ விபத்து என அசால்ட்டாக பதில் சொன்ன டாக்டர்கள்…!


பிரபல மருத்துவமனையில், தவறாக அறுவைசிகிச்சை செய்ததில் 28 வயது பெண் பரிதாப மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணூர் காவேரி நகரைச்சேர்ந்த காஜாமொய்தீன் என்பவரின் மனைவி சலிமா (வயது 28) இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். சலிமாவிற்கு வயிற்றுவலி காரணமாக திருவொற்றியூரில் திருவொற்றியூர்தேரடி எல்லையம்மன் கோயில் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளார்கள்.

முடிவில் கர்ப்பபையில் கட்டி இருப்பதை கண்டுபிடித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்கள். பின்னர் வார்டுக்கு கொண்டுவரப்பட்ட சலிமாவிற்கு விக்கல் ஏற்பட்டு அரைமணி நேரத்தில் உயிர் பிரிந்துள்ளது.

இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டதற்கு இது மருத்துவ விபத்து என்று சாதாரணமாக கூறியுள்ளார்கள். இதே போன்று இரண்டுமுறை இந்த மருத்துவமனையில் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

எனவே சலிமாவின் உறவினர்கள் இந்த மருத்துவமனையை முற்றுகையிட்டு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அந்த மருத்துவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மருத்துவமனையை மூட வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். இது குறித்து போலிஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!