ஏழு வருட காதலை சிதைத்த ஒரேயொரு போன் கால் – விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்..!


கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழக மாணவி லாவண்யாவை அவரது காதலன் நவீன்குமார் வழிமறித்து லாவண்யாவின் கழுத்தை கொடூரமாக அறுத்தது காதலி மேல் இருந்த சந்தேகத்தால் தான் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் லாவண்யா தற்போது நலமாக இருக்கிறார். காதலியின் கழுத்தை அறுத்த நவீன்குமார், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொடூரமாக கழுத்து அழுக்கப்பட்ட லாவண்யா, எழுவருடமாக காதலித்துவிட்டு கடைசியாக 20 நாள்களாகக் காதலனிடம் பேசாமலிருக்கக் காரணம் என்ன? காதலியைக் கொடூரமாக கழுத்தை அறுக்கும் அளவுக்கு நவீன்குமாருக்கு அப்படி என்ன கோபம் என விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்கள் வெளியாகியுள்ளது.

லாவண்யாவிடம் விசாரணை நடத்திய காவல் துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது நமக்கு சில பின்னணித் தகவல்கள் கிடைத்தன.
காவல் துறையினரிடம் லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தில், “புராஜெக்ட் சம்பந்தமா ஏப்ரல் 10ஆம் தேதி நாங்க ஏழு பேரு ஒரு டீமாகச் சென்னைக்குப் போனோம். புராஜெக்ட் வொர்க் முடிஞ்ச பிறகு நவீன்குமாரோட மெரினா பீச்க்கு போனோம். அப்போது நாங்கள் ஓரமா நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டே நடந்து போயி ஓரிடத்துல உட்கார்ந்து எங்களோட எதிர்காலத்தைப் பத்தி பேசிக்கிட்டிருந்தோம்.


அப்போ எனக்கு ஒரு போன் கால் வந்துச்சு. அதை பேசிட்டு உடனே கட் பண்ணிட்டேன். அதுக்கப்புறம் கொஞ்சநேரம் விட்டு ‘30 விநாடி பேசிட்டு உடனே கட் பண்ணிட்டியே…. போன்ல யாரு’ன்னு கேட்டு என்மேல சந்தேகப்படுற மாதிரி நவீன் பேச ஆரம்பிச்சிட்டாரு. ‘நாம ரண்டுபேரும் ஏழு வருஷமா காதலிக்கிற என்மேல இப்படி சந்தேகப்படலாமா? னு கோபமா கேட்டுட்டு அங்கிருந்து கிளம்பி என்னோட ஃப்ரெண்ட்ஸ் கூட சிதம்பரம் வந்துட்டேன். காலேஜுக்கு வந்ததிலிருந்தே நவீன்குமார் போன் பண்ணிட்டே இருந்தாரு.

நானும் கொஞ்சம் வேலை இருந்ததால ரெஸ்பான்ஸ் பண்ணாமலேதான் இருந்தேன். கடைசியா, நேற்று முன்தினம் காலேஜ் முன்னாடி வந்த அவரு கடைசில இப்படி பண்ணிட்டாரு. இப்படில்லாம் நடக்கும்னு நானும் கொஞ்சம் கூட நெனச்சுப் பார்க்கல” என கூறியுள்ளார்.

ஏழு வருடம் காதலித்து இப்படி காதலி மீது சந்தேகப்பட்டு இப்படி கொலை செய்யும் அளவிற்கு இறங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!