யாருடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி கோட் வாங்கினீர்கள்..? மோடியை கிண்டல் செய்த ரம்யா..!


கர்நாடகாவில் வரும் 12ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இருபெரும் கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் இவர்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரம்யா, சமூகவலைதளத்தில் பாஜகவை வறுத்தெடுத்து வருகின்றார்.

பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் ஒன்றில் சில வாரம் முன்பு அணிந்து இருந்த கோட்டின் விலையை கண்டுபிடித்து டிவிட் செய்துள்ளார். மோடி அணிந்து இருந்த கோட்டின் பெயர் லோரோ பியானா ஜாக்கெட் ஆகும். உலகில் உள்ள மிகவும் விலை உயர்ந்த ஆடைகளில் இதுவும் ஒன்றாகும். இதன் தற்போதைய இந்திய மதிப்பு, ரூபாய். 13,63,324 ஆகும்.

ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில், நரேந்திர மோடி ஜி, நீங்கள் அணிந்திருக்கும் ஆடை மிகவும் பேன்ஸியாக உள்ளது. இந்த கோட் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இதன் விலை மிகவும் குறைவு. வெறும் 17,000 யூரோதான். யாருடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி இதை வாங்கினீர்கள் மோடி? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

.@narendramodi ji so fancy! I love the Loro Piana jacket on you! Only 17,000 Euros! Very cheap. Who’s credit card was used to pay for this Modi ji? pic.twitter.com/yK2nsAG63O

— Divya Spandana/Ramya (@divyaspandana) 1 May 2018

Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!