அட கடவுளே! இப்படியும் ஒரு கொடுமையா..? நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டை நாடிய தொழிலாளி..!


ஆஸ்திரேலியாவில் தொழிலாளி ஒருவர் தனது முதலாளி அதிகமாக கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றிதால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி 1.8 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தது வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படி ஒரு வழக்கு. டேவிட் ஹின்ஸ்க்ட் என்ற நபர் தொடர்ந்திருந்த வழக்கில், எனது பாஸ் ஒரு நாளைக்கு அதிகமாக கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறார். இதன் காரணாமாக மன அழுத்தம், பதட்டம் மற்றும் உடல் ரீதியாக சில காயங்களுக்கு கூட நான் ஆளாகி இருக்கிறேன். ஒரு முறை நாற்றம் தாங்க முடியாமல் ஸ்பிரே அடித்திருகிறேன் என கூறியுள்ளார்.

கடந்த ஒரு வருடமாக இந்த பிரச்சினைக்கு ஆளாகியிருக்கிறேன் என கூறியுள்ளார். அவர், திட்டமிட்டே இவ்வாறு செய்திருக்கிறார். இதனால் நான் எனது பணியினையும் இழந்துள்ளேன் என தெரிவித்துள்ளார். 18 நாட்கள் இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டது. இதில், வாயு வெளியேற்றுவதை எல்லாம் கொடுமை என்று எடுத்துக் கொள்ள மாட்டாது. டேவிட் உட்பட அனைத்து சாட்சியங்களையும் செல்லாது என்று கூறி, வழக்கை தள்ளுப்படி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!