இயற்கை பொருட்களைக் கொண்டு பத்தே நிமிடங்களில் நரைமுடியைக் கருமையாக்கும் வித்தை..!


இன்றைய அவசர உலகில், மாசு மற்றும் தூசுக்களால் சருமத்தையும் தலைமுடியையும் பராமரிப்பது மிகப் பெரிய சவாலாக மாறிவிட்டது. அதனால் மாதம் ஒரு முறை பார்லருக்குப் போய் காசை விரயமாக்கியும் பலனில்லை என்ற கவலை.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு, ஓய்வு நேரங்களில் நாமே களத்தில் இறங்குவது தான். வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டே நரையைப் போக்க முடியும். அதற்கு தினமும் 10 நிமிடங்கள் வரை ஒதுக்கினாலே போதும்.
தேவையான பொருட்கள்

1/4 கப் தேங்காய் எண்ணெய்

1 எலுமிச்சை

தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொண்டு, அதில் அரை எலுமிச்சை பழத்தைப் பிழிந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை தலைமுடியின் வேர்க்கால்களில் தேய்த்து, 15 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்யவும்.

எண்ணெயும் ஜூஸூம் நன்கு வேர்க்கால்களில் இறங்கி, உலர்ந்ததும் தரமான ஷாம்பு கொண்டு தலையை அலசுங்கள்.

தினமும் குளிக்கச் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக இதைச் செய்து வந்தாலே போதும். மிக விரைவிலேயே உங்களுடைய தலையில் உள்ள வெள்ளை முடியின் நிறம் மாறி, நல்ல கருப்பாகும்.-Source: manithan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!