துரோகம் செய்த கணவனுக்கு மனைவி செய்த அதிர்ச்சி செயல்..!


தமிழகத்தில் கணவர் மீது ஆசிட் வீசி நாடகாமாடியுள்ள மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் மாலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி பஷீர்-சுபைதா. இவர்களது மகன் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி படித்து வருகிறார்.

இந்நிலையில் பஷீருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த சுபைதா தனக்கு அவர் துரோகம் செய்துவிட்டதாக கருதி, அவர் மீது நீண்ட நாட்களாக கோபத்தில் இருந்துள்ளார்.

இதனால் கடந்த மார்ச் மாதம் 20-ஆம் திகதி நள்ளிரவில் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது, தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அவர் முகத்தில் வீசியுள்ளார்.

இதனால் வலியால் பஷீர் துடித்த போது யாரோ வீசிவிட்டு சென்றுவிட்டதாக கூறி அவரின் வேதனையை பார்த்து ரசித்துள்ளார்.

அதன் பின், வேறு யாரோ தன்னுடைய கணவர் முகத்தில் ஆசிட் வீசி விட்டு சென்றுவிட்டதாக பொலிசாரிடம் கூறியுள்ளார்.

பொலிசார் மருத்துவமனையில் இருந்த பஷீர் மற்றும் சுபைதாவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது எந்த வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

அதன் பின் மனைவியான சுபைதா மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் சம்பவம் நடந்த அன்று சபைதாவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

பஷீர் மீது மட்டும் ஆசிட் வீசப்பட்டிருந்ததால் கூட அவர் அலறியவுடன் சபைதா அவரை தூக்கியிருந்தால் அவரது உள்ளங்கைகளில் காயம் ஏற்பட்டிருக்கும்.

ஆனால் காயம் எதுவும் இல்லை, அதுமட்டுமின்றி அடையாளம் தெரியாத நபர் வீட்டிற்குள் புகுந்திருந்தால், சுபைதா சில நாட்களுக்கு பதட்டத்துடன் காணப்பட்டிருப்பார்.

விசாரணையின் போது அவர் ஒரு பதட்டம் கூட படவில்லை, வேறொரு நபர் வீட்டிற்குள் புகுந்திருந்தால், சபைதா சத்தம் போட அக்கம் பக்கத்தினர் வந்திருப்பார்கள், ஆனால் அக்கம் பக்கத்தினருக்கு இது குறித்து தெரியவே இல்லை.

இதுமட்டுமா? பஷீர் மீது 11 மணியளவில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. ஆனால் அவர் 2 மணிக்கு தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஆம்புலன்ஸ் வரவில்லை என்று கூறினாலும், 11 – 2 மணிகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் சுபைதாவின் போனிலிருந்து மருத்துவமனைக்கு எந்த போனும் போகவில்லை. அவரது மகன் மற்றும் மருமகனுக்கு மட்டும் ஒரு முறை போன் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பாலம் ஒன்று உள்ளது, அந்த பாலத்தில் ஆசிட் பாட்டில் ஒன்று கிடந்துள்ளது. இதை சுபைதா ஆம்புலன்சில் போகும் வழியில் வீசியிருக்கலாம் என்று சந்தேகப்பட்டோம்.

இதைத் தொடர்ந்து அங்கிருக்கும் உரக் கடை ஒன்றில் விசாரித்த போது சபைதாவின் உருவ அடையாளங்களை ஒரு கடைக்காரர் கூறிய பின்பு தான் இதை நாங்கள் உறுதி செய்தோம்.

இதை எல்லாம் வைத்து அவரிடம் கேட்ட போது பதில் கூற முடியாமல் திணறினார், அதன் பின் ஒரு வழியாக நான் தான் செய்தேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

குற்றத்தை ஒப்புக் கொண்டதால் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பஷீர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.-
Source: puthiyathalaimurai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!