பாலியல் கொடுமைக்கு ஆளான பிரிட்டன் பெண்ணிற்கு நீதி மறுப்பு..!!


2010 ஆண்டு இலங்கைக்கு சுற்றுலாவிற்காக சென்றிருந்த வேளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பிரிட்டனை சேர்ந்த பெண்ணிற்கு நஸ்டஈடு வழங்குவதற்கு பிரிட்டனின் மேல்முறையீட்டு நீதிமன்றம் மறுத்துள்ளது.

குறிப்பிட்ட பெண்மணி 2010 ஆண்டு இலங்கையின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஹோட்டலொன்றில் தனது கணவருடன் தங்கியிருந்தவேளை ஹோட்டலின் சீருடை அணிந்த பணியாளரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார் என டெய்லிமெய்ல் தெரிவித்துள்ளது.

ஹோட்டலை சுற்றி காண்ப்பிப்பதாக தெரிவித்து தன்னை ஹோட்டலின் பொறியியல் பிரிவின் அறைக்கு அழைத்துசென்ற அந்த நபர் கத்திமுனையில் தன்னைபாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் என பாதிக்கப்பட்ட பெண்மணி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாதிக்கப்ட்ட நிலையில் இங்கிலாந்து திரும்பிய பெண் பின்னர் தான் கர்ப்பமாகயிருப்பதும் ; பாலியல் தொற்றுநோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமையும் தெரியவந்தது என அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இலங்கைக்கு தன்னை அழைத்துசென்ற சுற்றுலா நிறுவனத்திற்கு எதிராக அவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

எனினும் இடம்பெற்ற சம்பவத்திற்காக குறிப்பிட்ட ஹோட்டல் மீதோ அல்லது சுற்றுலா நிறுவனம் மீதோ குற்றம்சாட்ட முடியாது என பிரிட்டனின் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட பெண்ணை இலங்கைக்கு சுற்றுலாப்பயணியாக அழைத்துச்சென்ற நிறுவனத்திற்கும் சம்பவம் நடந்த ஹோட்டலிற்கும் எந்த தொடர்பும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குற்றத்தில் ஈடுபட்டவர் என தெரிவிக்கப்படும் நபரிற்கு எதிராக கடந்த காலங்களில் எந்த முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் குறித்து நாங்கள் அனுதாபமும் கருணையும் கொண்டுள்ள போதிலும் அவரது மேல் முறையீட்டை நிராகரிக்கின்றோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.source-metro

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி