பிஞ்சு குழந்தையின் பிறப்பு உறுப்புகளை துண்டித்த கொடூர டாக்டர் – பதற வைத்த காரணம்..!


ஜார்கண்டின் சத்ரா மாவட்டத்தில் வசித்து வருபவர் அனில் பண்டா. இவரது 8 மாத கர்ப்பிணி மனைவிக்கு கடந்த செவ்வாய் கிழமை பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அருண் குமார் என்ற மருத்துவரிடம் அன்றிரவு சென்றுள்ளனர்.

அவர் பரிசோதனை செய்து விட்டு அனுஜ் குமார் என்பவர் நடத்தும் மருத்துவமனைக்கு செல்லும்படி கூறியுள்ளார். அங்கு அனில் தனது மனைவியை சேர்த்துள்ளார்.

இந்த நிலையில், பிரசவத்திற்கு முன் அனுஜ் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்து உள்ளார். அதன்பின் பெண் குழந்தை பிறக்கும் என அனிலின் குடும்பத்தினரிடம் அனுஜ் கூறியுள்ளார்.

ஒரு சில மணிநேரங்களில் அனிலின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆரோக்கியமுடன் ஆண் குழந்தை பிறந்த நிலையில் அனிலின் மனைவி மற்றும் தாயார் அழுதபடி இருந்துள்ளனர்.

கிளினிக்கிற்குள் ஓடிய அனில், அங்கு இறந்து கிடந்த குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அல்ட்ராசவுண்ட் அறிக்கையை உண்மையாக்குவதற்காக மருத்துவர் அனுஜ் ஆண் குழந்தையின் பிறப்புறுப்புகளை துண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட ரத்த கசிவினால் குழந்தை இறந்து விட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் வருவதற்குள் மருத்துவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 மருத்துவர்களையும் தேடி வருகின்றனர்.

அவர்கள் பாலின பரிசோதனை மேற்கொள்வதற்காக அல்ட்ரா சவுண்டு இயந்திரங்களை பயன்படுத்திய குற்றத்திற்காக எப்.ஐ.ஆர். போடப்பட்டு உள்ளது. கிளினிக்குகளுக்கு சீலும் வைக்கப்பட்டு உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!