யாழில் நடந்த விசித்திர வழக்கு..!! தீர்ப்பினால் அதிர்ச்சியான குற்றவாளி..!!


வெப்­பம் அதி­க­மாக உள்­ள­தால் குளிர்­மைக்­காக ஆசி­ரி­யர் மது அருந்தி­னார் ஆனால் அவர் குடிகாரர் இல்லை என்று யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் முற்­ப­டுத்தப்­பட்ட ஆசிரி­யர் சார்­பில் சட்­டத்­த­ரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெப்­பம் அதி­க­மாக உள்­ள­தால் குளிர்­மைக்­காக ஆசி­ரி­யர் மது அருந்தி­னார் ஆனால் அவர் குடிகாரர் இல்லை என்று யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் முற்­ப­டுத்தப்­பட்ட ஆசி­ரி­யர் சார்­பில் சட்­டத்­த­ரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோப்­பாய் பொலிஸ் பிரி­வில் வீதிப் போக்­கு­வ­ரத்துக் கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்­டி­ருந்த பொலி­ஸா­ரால் மது போதையில் வாகனம் செலுத்தியதாக ஆசி­ரி­யர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார்.

பொலிஸ் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த அவர் நேற்று (26) நீதி­மன்­றில் முற்படுத்­தப்­பட்­டார் இதன்­போதே ஆஜராகிய மூத்த சட்­டத்­த­ரணி மேற்கண்­ட­வாறு கூறி­னார்.

“ஆசி­ரி­யர் குற்­றத்தை ஏற்றுக்கொள்கி­றார். அவர் தீவகத்தில் பணி­யாற்­று­கி­றார். அதிக வெப்­ப­நிலை கார­ண­மா­க குளிர்மைக்­கா­கவே அன்று அவர் மது அருந்­தி­னார். ஆனால் தின­மும் மதுப்ப­ழக்­க­முள்ள குடி­கா­ரர் இல்லை” என்று மூத்த சட்­டத்­த­ரணி மன்­றில் தெரி­வித்­தார்.

எனினும் ஆசி­ரி­ருக்கு 7,500 ரூபா தண்­டம் விதித்­ததுடன் 1,500 ரூபா அரச செல­வாக அற­வி­டு­மா­றும் மன்று உத்­த­ர­விட்­டது. மேலும் ஆசிரிய­ரின் சாரதி அனு­ம­திப் பத்திரத்தை 9 மாதங்­க­ளுக்­குத் முடக்கி வைக்குமாறு நீதி­மன்ற பொலி­ஸா­ருக்கு மன்று உத்தரவிட்டது.source-newjaffna

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி