ஃபிரியா செய்ததை அந்த சேனல் காசு கொடுத்து பண்ண வச்சிட்டாங்க – கலாய்த்த விஷால்!


எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் 16 பெண்களின் வாழ்க்கையை ஆர்யா காப்பாற்றிவிட்டான் என நடிகர் விஷால் கிண்டலடித்துள்ளார்.

பிரபல தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஆர்யா நடத்தி வந்த ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஷோ சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இந்த ஷோவில் இறுதியாக வெற்றிபெறும் பெண்தான் ஆர்யாவின் மனைவி என்று விளம்பரம் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. எனவே ஆர்யாவை கைப்பிடிக்கும் அந்த அதிர்ஷ்டசாலி பெண் யார்? என்ற கேள்வி அனைவர் மனதிலும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொருவராக எலிமினேட் ஆகி கடைசியில் ஐந்து பெண்கள் தேர்வு ஆனார்கள். ஐந்து பேர்களின் வீடுகளுக்கும் ஆர்யா விசிட் செய்தார். இந்த நிலையில் இந்த ஐந்து பேர்களில் மேலும் இரண்டு பேர் எலிமினேட் ஆன நிலையில், இறுதியாக சுசானா, சீதாலக்ஷ்மி, அகாதா ஆகிய மூன்று பெண்கள் இருந்தனர்.

ஆனால், இறுதி நிகழ்ச்சியில் அகாதா, சுசானா மற்றும் சீதாலட்சுமி ஆகியோர் மணக்கோலத்தில் இறுதி சுற்றில் பங்குபெற்றனர். ஆனால் ஆர்யா மூவரில் ஒருவரை தேர்வு செய்யாமல் தட்டி கழித்தது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், சந்திரமௌலி பட இசை வெளியீட்டு விழாவில் ஆர்யா மற்றும் அவரின் நண்பரும், நடிகருமான விஷால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது மேடையில் பேசிய விஷால் “ நான் இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே சொன்னேன். அவன் கல்யாணம் செய்து கொள்ள மாட்டான். அவர் ஃபிரியா செஞ்சிக்கிட்டு இருக்கிற ஒரு விஷயத்தை, அந்த சேனல் காசு கொடுத்து பண்ண வச்சிட்டாங்க. யாரையும் கல்யாணம் பண்ணிக்கலன்னு சொல்லு அந்த 16 பெண்களோட வாழ்க்கையை அவன் காப்பத்தி இருக்கான். எனவே, எல்லோரையும் ஆர்யாவை பாராட்டுங்க” என கிண்டலடித்தார்.-Source: tamil.webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!