பிரசவத்திற்கு பின் அன்னாசியை ஏன் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும்..?


சுகப்பிரசவத்தின் போது பெண்ணுறுப்பில் காயம் ஏற்படுவது ஒரு சாதாரணமான விஷயம் தான். இந்த காயமானது குழந்தை வெளிவரும் போது உண்டாகிறது. இது வலி மிகுந்தது ஆகும். குழந்தை பிறந்தது பிறகு இந்த காயம் ஆற மருத்துவர்கள் சில ஆலோசனைகளை கூறுவார்கள். இந்த நேரத்தில் அந்தரங்கப்பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இல்லை என்றால் தொற்றுக்கள் உண்டாகிவிடும்.


அன்னாசி பழம்
அன்னாசிபழம் மிகுந்த சக்தி வாய்ந்த ஒரு பழமாகும். இது புண்கள் மற்றும் வீக்கங்களை சரி செய்யக் கூடிய தன்மை உடையது. ஈரானிய ரெட் கிரெசெண்ட் மெடிக்கல் ஜர்னல் ஆனது 2016 ஆம் ஆண்டில் அன்னாச்சிப்பழத்திற்கு இருக்கும் புண்களை ஆற்றும் தன்மையை கண்டறிந்தது. இது பிரசவமான பெண்களுக்கு இருக்கும் புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது என்று தனது ஆய்வின் மூலம் கண்டறிந்தது.


சாப்பிடலாமா?
அன்னாசி பழத்தை நீங்கள் சாப்பிடலாமா என்று சந்தேகிப்பீர்கள். கர்ப்ப காலத்தில் தான் சிலரை இந்த பழத்தை சாப்பிட கூடாது என்று கூறியிருப்பார்கள். ஆனால் பிரசவத்திற்கு பிறகு நீங்கள் அன்னாச்சிப்பழம் சாப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. இது பெண்ணுறுப்பில் உண்டான புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.


சிறுநீரக கற்களுக்கு
அன்னாசி துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகும். அன்னாச்சிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக் கற்கள் கரையும். இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும்.


ஜீரண சக்தி
அன்னாச்சிப்பழம்ப்பழச்சாறை ஒரு நாள் நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி மாறும். அன்னாசிப்பழச்சாறை ஒரு நாள் நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி மாறும். பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கி வர தொண்டைவலி, தொண்டைப்புண் தீரும்.


பூச்சிகள் அழியும்
அன்னாசி இலைச்சாறு வயிற்றின் பூச்சிகளை அழிக்கும் தன்மை நிறைந்து காணப்படுகிறது. அன்னாச்சி இலைச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்த, பேதியாகி வயிற்றுப்பூச்சிகள் வெளியேறிவிடும். இலையைப்பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறுடன், சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட, விக்கல், இழுப்பு நோய் தீரும்.


சத்துக்கள்
அன்னாசிப்பழத்தில் வைட்டமின், ஏ, பி, சி சத்துகள் அதிகம் உள்ளது. மேலும் நார்ச்சத்து, புரதம், இரும்பு சத்துகள் உள்ளதால் இதை தொடர்ந்து சாப்பிட்டால் முகம் அழகாக மாறும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். அன்னாசி பழச்சாறுடன் தேன் கலந்து ஒரு மாத காலத்திற்கு சாப்பிட்டால் தலைவலி, பல்வலி, கண், காது, தொண்டை சம்மந்தபட்ட நோய்கள் வராது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!