மனவளர்ச்சி குன்றிய மகளை தாயாக்கிய கொடூரனுக்கு அதிரடி தண்டனை..!


மனவளர்ச்சி குன்றிய, 17 வயது மகளை, பாலியல் பலாத்காரம் செய்து தாயாக்கிய, கொடூர தந்தைக்கு, நான்கு ஆயுள் தண்டனை வழங்கி, தஞ்சை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.தஞ்சாவூர் மாவட்டம், சிவக்கொல்லை பகுதியைச் சேர்ந்த பெயின்டர் சுப்ரமணியன், 50.

இவரது மனைவி ரேவதி, கூலித்தொழிலாளி. ஒரு முறை ரேவதி, மேல்மருவத்துார் கோவிலுக்கு சென்று விட்டார். அப்போது, சுப்ரமணியன், வீட்டில் இருந்த, 17 வயது மனவளர்ச்சி குன்றிய மகளை, பாலியல் பாலத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து, தாயிடம் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதையடுத்து, ரேவதி வீட்டில் இல்லாத நேரத்திலும், பள்ளி விடுமுறை நாட்களிலும், சுப்ரமணியன் தொடர்ந்து, மகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

கடந்த, 2017 மார்ச்சில், வயிற்று வலியால் மகள் துடித்துள்ளார். அவரை, மருத்துவமனைக்கு ரேவதி அழைத்து சென்ற போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.சில மாதங்களில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

மகளிடம் விசாரித்த போது, சுப்ரமணியன் தான் இதற்கு காரணம் என தெரிந்தது.அதிர்ச்சி அடைந்த ரேவதி, பட்டுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். சுப்ரமணியன் கைது செய்யப்பட்டார். வழக்கு, தஞ்சை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

விசாரணை முடிந்து, நேற்று நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பளித்தார்.மகள் என்றும் பாராமல், பாலியல் பலாத்காரம் செய்ததற்கு, நான்கு ஆயுள் தண்டனையும், கொலை மிரட்டலுக்கு, ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், சுப்ரமணியன் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.-Source: dinamalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!