பாதிரியாரை கதறக் கதறக் பலாத்காரம் செய்த இளம் பெண்கள் பகீர் வாக்குமூலம்..!


ஸிம்பாப்வே நாட்டில் உள்ள Bulawayo என்ற நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் பெயர் வெளியிடப்படாத பாதிரியார் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார்.இந்த பாதிரியாரிடம் Sandra Ncube(21), Riamuhetsi Mlauzi(23) மற்றும் Mongiwe Mpofu(25) ஆகிய 3 இளம்பெண்கள் பணம் கடனாக பெற்றுள்ளனர்.நீண்ட நாட்களாக பணத்தை திருப்பி செலுத்தாததால், பணத்தை வாங்குவதற்காக பாதிரியார் மூவரும் தங்கியிருந்த வீட்டிற்கு சில தினங்களுக்கு முன்னர் சென்றுள்ளார்.

அப்போது, வீட்டிற்குள் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என மூவரும் கூறியுள்ளனர். மூவரின் பேச்சை நம்பிய பாதிரியார் வீட்டிற்குள் சென்றபோது, மூவரும் திடீரென அவர் மீது பாய்ந்து கட்டிப்போட்டுள்ளனர்.நடப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பாதிரியார் அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடியுள்ளார்.மூவரில் ஒருவரான Sandra Ncube என்ற பெண் உள்ளே சென்று ஆணுறையை எடுத்து வந்துள்ளார்.மற்ற இருவரும் பாதிரியாரை பிடித்துக்கொள்ள மூன்றாவது பெண் பாதிரியாரை கற்பழித்துள்ளார்.

மேலும், இரண்டு பெண்களும் பாதிரியாரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக மூவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.அப்போது, மூவரில் ஒருவர் பாதிரியாரை கற்பழித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், மற்ற இருவரும் ஒப்புக்கொள்ளவில்லை.

இதுக் குறித்து பெண்கள் நீதிமன்றத்தில் பேசியபோது, “பிற ஆண்களை போல் பாதிரியாருக்கும் பெண்கள் மீது மோகம் இருக்கும்.இதனை நிரூபிக்க தான் நாங்கள் மூவரும் இவ்வாறு நடந்துக்கொண்டோம். நாங்கள் தொட்டதும் அவரும் எங்களது விருப்பத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்” என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஆனால், பெண்களின் வாக்குமூலத்தை பாதிரியார் மறுத்துள்ளார்.தற்போது இவ்விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கு தொடர்பான மறுவிசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 7-ம் திகதி வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.-Source: newlanka

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!