பெண்களின் மார்பகத்தை சிதைக்கும் காபி..! ஆய்வில் பகீர் தகவல்!


பெண்களை பொறுத்தவரையில் அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரியான மார்பகங்கள் இருப்பதில்லை. வெவ்வேறு வகையான தோற்றம் மற்றும் அளவுகளில் இருக்கின்றன. அதே நேரத்தில் மார்பகத்தில் திடீரென்று ஏற்படும் மாற்றங்களும் பொதுவானவை அல்ல.

உங்கள் மார்பகம் குறிப்பிட்ட சில மாற்றங்கள் ஏற்பட்டால் அது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியது ஒன்று என்பதை பெண்கள் மறந்து விடவேண்டாம்.

முலைக்காம்பை சுற்றி கட்டிகள்:

பெண்களின் காம்பு பகுதியை சுற்றியிருக்கும் இடத்தில் வீக்கமோ அல்ல சிறிய பருக்கள் தென்பட்டால் அதற்கு பால் குழாய்களில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம்.

அதே நேரத்தில் கட்டியின் அளவு பெரியதாக இருந்தால் அல்லது சதை வளர்ச்சியோ இருப்பதற்கான வாய்ப்பும் உண்டு. இதனை உடனடியாக டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம்.

வலி:

பொதுவாக பெண்களின் மார்பகங்களில் திடீரென்று வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. கணவன், மனைவியிடம் உடலுறவு சமயத்தில் காம்புகளை கைகளால் பிடித்து அழுத்துவதாலும் கூட வலி ஏற்படும்.

ஒரே நேரத்தில் இரண்டு மார்பகங்களும் வலிக்கிறது என்றால் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதாகவோ அல்லது அதிகமான கஃபைன் காரணமாகவோ கூட இருக்கலாம்.

சரியான உள்ளாடை தேர்ந்தெடுக்காமல் இருப்பது, இரும்புச்சத்து குறைபாடு, அல்லது மாதவிலக்கு கால தாமதம் ஆகிய காரணத்தினாலும் வலி ஏற்படும்.

இந்த அறிகுறியால் மார்பகம் வலிக்கு காரணம் என்று உங்களுக்கு தோன்றவில்லை எனில் டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம்.

முலைக்காம்பு தலைகீழாவது:

திடீரென்று முலைக்காம்புகள் உட்பக்கமாக திரும்பினால், அது மார்பக புற்று நோய்க்கான அறிகுறியாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

இது மிகவும் ஆபத்தான ஒரு அறிகுறியாகும் இதனை அலட்சிய படுத்த வேண்டாம். உடனடியாக டாக்டரை பார்ப்பது நன்று.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!