கேக்கினை வாளால் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய பிரதமர்..!!


தமிழ், சிங்கள புத்தாண்டு காலங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது நேரத்தின் நுவரெலியாவில் செலவிடுவதனை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதற்கமைய பிரதமர் இந்த நாட்களில் நுவரெலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

நுவரெலியாவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில், உலகின் மிக நீளமான உருளைக்கிழங்கு கேக் தயாரித்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பிரதமர் அதனை இன்று பார்வையிட்டுள்ளார்.

380 கிலோ கிராம் நிறையுடைய இந்த கேக் 111 மீற்றர் நீளத்தை கொண்டுள்ளது.

இந்த கேக்கினை வாளில் வெட்டி திறந்து வைப்பதற்கு பிரதமர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.source-tamilwin

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி