வீட்டில் நாய் வளர்ப்பவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!! நகர சபை அதிரடி..!!


சகல நாய்களையும் உடனடியாக பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்துள்ள அநுராதபும் நகர சபையின் தலைவர் எச்.பீ. சோமதாஸ, அது கட்டாயமாக்கப்பட்டு, பதிவு செய்வதற்கு கட்டணம் அறவிடப்படும் என்பதுடன், மத்திப்பீட்டு அறிக்கையை பேணுவதும் கட்டாயப்படுத்தப்படும் என்றார்.அநுராதபுரம் நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்து நாய்களையும் இதனூடாக உடனடியாகப் பதிவு செய்யவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

நாய்களால், சாதாரண மக்கள் மாத்திரமன்றி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கும் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாகத் தெரிவித்த மேயர், நாய்களால், வீதி விபத்துகள் மற்றும் நகரத்தின் சுற்றாடல் அசுத்தமடைதல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளனவென குறிப்பிட்டுள்ளார். நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்போர், தமது பொறுப்புகளிலிருந்து விலகியிருக்காதிருக்கும் வகையிலேயே, மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அநுராதபுர நகரில் காணப்படும் சுற்றாடல் பிரச்சினைகளில், கட்டாக்காலி நாய்கள் மற்றும் நுளம்பு பெருக்கமே பெரும் பிரச்சினையாக உள்ளன. அவை தொடர்பில் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வீடுகளில் வளர்க்கப்படும் சகல நாய்களும், பதிவு செய்யப்பட வேண்டுமெனவும், வீடுகளில் வளர்க்கும் நாய்கள் குட்டி ஈன்றதன் பின்னர், அந்த நாய்க்குட்டிகளை பலர், வீதிகளில் கொண்டுவந்து விட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர்.

ஆகையால், நாய்களுக்கு வரி அறவிடுவதன் மூலம், கட்டாக்காலி நாய்கள் உருவாவதைத் தடுக்க முடியுமென்றும், நகர மேயர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.source-tamilmirror

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி