அமைச்சு பதவியை விட்டு செல்லப் போவதில்லை..!! நாமல் ஆவேசம்..!!


மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வெளிப்படுத்தி பொதுத் தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் நீண்ட காலத்திற்கு செல்லாமல் நாடாளுமன்ற தேர்தலை நடத்தக் கோரி வீதிக்கு இறங்குவோம் என நாமல் எச்சரித்துள்ளார்.

சமகால அரசாங்கத்தின் காதல் தொடர்பு வெற்றியளிக்காது. தற்போது விவாகரத்து சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விவாகரத்திற்கான தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றாலும் மனதளவில் விவாகரத்து பெற்றுள்ளனர்.

தயவு செய்து தேர்தலை பிற்போடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மூன்றில் இரண்டு அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலை நடத்துங்கள். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய மக்களுக்கான அரசாங்கத்தை உருவாக்க அந்த தேர்தலை பயன்படுத்துங்கள்.


தற்போது குழு அமைத்து ஐக்கிய தேசிய கட்சியை சீர்த்திருத்தம் செய்வதற்கு குழுவொன்று கலந்துரையாடல் மேற்கொண்டு வருகின்றது. எனினும் அதற்கும் ரணில் தான் தலைவர். ரணிலை விலக்கி விட்டு புதிய பிரதமரை கொண்டு வர வேண்டும் என கூறியவர்கள் தான் பாவம். அவர்களே மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் அமைச்சு பதவியை விட்டு செல்லப் போவதில்லை என கூறுகின்றனர். விட்டு செல்ல வேண்டாம் என ஜனாதிபதி கூறுகின்றாராம். அவர்களுக்கு எதிர்கட்சியில் அமர வேண்டிய அவசியமே உள்ளது” என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

பெலிஅத்த பிரதேச சபையில் புதிய உறுப்பினர்கள் பணிகளை பொறுப்பேற்றும் சந்தர்ப்பத்தில் கலந்து கொண்ட நாமல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.source-tamilwin

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி