தேர்தலில் மக்களுக்கு சொன்ன ஆணையை நிறைவேற்றுங்கள் – மைத்திரியிடம் சம்பந்தன் கோரிக்கை..!


2015 அதிபர் தேர்தலின் போது அளித்த மக்கள் ஆணையை நிறைவேற்றுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த சந்திப்பின் போதே தாம் இந்தக் கோரிக்கையை விடுத்திருப்பதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

”நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக கூட்டமைப்பு இன்னமும் இறுதியான முடிவு எதையும் எடுக்கவில்லை. இன்று முடிவு எடுக்கப்படும், அதுபற்றி நான் சிறிலங்கா அதிபருக்கு அறிவித்துள்ளேன்.

தற்போதைய அரசாங்க கட்டமைப்பு தொடர வேண்டுமா என்பதை நான் முடிவு செய்ய முடியாது.

எனினும், நாட்டில் பொருளாதார பிரச்சினைகள், ஜனநாயக விடயங்கள், தேசியப் பிரச்சினை போன்றவற்றைத் தீர்ப்பதற்கு நாட்டில் அரசியல் உறுதிப்பாடு முக்கியம்” என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.-Source: puthinappalakai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!