பாலைவனத்தில் இயற்கையான முறையில் விவசாயம்… எங்கு தெரியுமா..?


சீனாவின் கான்சூ மாகாணத்தில் உள்ள சுசோகு மாவட்டமானது கோபி பாலைவனத்தின் எல்லையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் விவசாயம் செய்வது என்பது முடியாத காரியம். குறிப்பாக கோடைக்காலங்களில் மிகவும் மோசமானதாக இருக்கும். ஆனால் அதனை மாற்றி அமைத்து காய்கறிகளை விளைய செய்து சீனர்கள் சாதித்துள்ளனர்.

அம்மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுடன் வேளாண் துறை அதிகாரிகள் இணைந்து பசுமைவீடுகள் மூலம் சாகுபடி செய்தனர். இங்கு இயற்கை பொருட்களை கொண்டு விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு வெள்ளரி, தக்காளி போன்ற காய்கறிகள் பயிரப்பட்டு உள்ளன.

தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் உரமாக பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரிய முறையிலான விளைச்சலை காட்டிலும், இது மண்ணின் தரத்தை மேம்படுத்தக்கூடியது.

இம்மாவட்டத்தில் மட்டும் 800 ஹெக்டேர் அளவிற்கு காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதனால் நல்ல நிலங்கள் பாலைவனமாக மாறுவது தடுக்கப்படுகிறது. இதன் மூலம் கிராமத்தில் உள்ள மக்கள் அதிக அளவில் பயனுடைந்துள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!