அடர்த்தியான மிருதுவான நீண்ட கூந்தலை பெற உதவும் ஆமணக்கு எண்ணெய்..!


ஆமணக்கு எண்ணெய் என்று சொன்னதும் பலர் அறிந்திருப்பதில்லை, சிலர் முகம் சுழிக்கவும் செய்கின்றனர்.

ஆனால் ஆமணக்கு மரத்தில் உள்ள விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யில் பல எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது.

இந்த எண்ணெய் பல அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்து வகைகளிலும் பயன்படுத்துகின்றனர்.

ஆமணக்கு எண்ணெய்யை உட்கொள்வதால் மலச் சிக்கலில் இருந்து தீர்வைத் தருவதுடன் குடலில் உள்ள நுண்ணங்கிகளை அழிக்க வல்லது.

ஆமணக்கு எண்ணெய்யை பயன்படுத்துவதன் மூலம் அடர்த்தியான மிருதுவான நீண்ட கூந்தலை பெற முடியும்.

ஆமணக்கு எண்ணெய்யின் நன்மைகள்.

(1) அடர்த்துயான நீண்ட கூந்தல்.


ஆமணக்கு எண்ணெய்யில் உள்ள ஒமேகா-9 கொழுப்பு முடிகளின் வேர்களிற்குள் சென்று சிறந்த ஊட்டச்சத்தை வழங்குவதுடன், நீண்ட அடர்த்தியான கூந்தலை பெற முடியும்.

(2) பொடுகு

ஆமணக்கு எண்ணெய், ஒலிவ் எண்ணெய், எலுமிச்சபழச் சாற்றைச் சேர்த்து மண்டையோட்டில் சேர்த்து ஒரு மணி நேரத்தின் பின்னர் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

(3) முடிகளின் வெடிப்பை அகற்றுதல்

முடியின் நுனியில் இந்த எண்ணெய்யை தடவி இரண்டு மணி நேரம் ஊற விட வேண்டும். இதனால் முடிகள் வெடிப்பதை தவிர்க்க முடியும்.


(4) கண் இமை

இமைப் பகுதிகளில் எண்ணெய்யை தடவி வந்தால் அடர்ந்த அழகான இமைப் பகுதிகளை பெற முடியும்.

 ஆமணக்கு எண்ணெய் கூந்தல் வளர்வதை அதிகப்படுத்துவதுடன், பக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கின்றது.

 மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி உதிர்வதைத் தடுக்கின்றது.

 செயற்கை அழகுசாதனப் பதார்த்தங்களின் பாவனையால் ஏற்படும் பக்கவிளைவுகளில் இருந்து பாதுகாக்கின்றது.

ஆமணக்கு எண்ணெய்யை பயன்படுத்தும் முறை

ஒரு பாத்திரத்தில் ஆமணக்கு எண்ணெய் எடுத்து அதற்கு சம அளவான வேறு எண்ணெய்யுடன்(தேங்காய் எண்ணெய்) கலந்து, அதனை கொதித்த நீரில் வைத்து சூடாக்க வேண்டும்.

அந்த எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் சிறந்த பலனைப் பெற முடியும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!