உங்க வயிற்றுக்குள் இந்த மீன் போனா அவ்வளவு தான்..! – ஆராய்ச்சியாளர்கள் பகீர் இரகசியம்..!!


சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மீன்களிடம் பேசும் அதிசய ரோபோவைக் கண்டு பிடித்துள்ளது.

ஜெனிவாவில் இயங்கும் அந்த நிறுவனம் பல வருட அதிதீவிர ஆராய்ச்சிக்கு பின் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்த ‘ரோபோ’ மிகவும் சிறியதாக மீன் வடிவத்திலேயே உள்ளது. மீன்களை எளிதில் ஏமாற்றும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் சூரிய ஒளி மூலம் இயங்கும் இயந்திரங்கள் இந்த மீனின் உடலில் பொருத்தப்பட்டுள்ளன.

இதனால் மீன்களைப் போலவே நீந்தச் செல்லும் திறன் படைத்தவை. மேலும், அதில் உள்ள டிரான்ஸ் மீட்டர் நமக்கு தகவல்களை அனுப்பிக்கொண்டே இருக்கும்.

இந்த ‘ரோபோ’ கடலுக்குள் சென்று நாம் தெரிவிக்கும் தகவல்களை மீன்களுக்கு புரியும்படி கூறும் திறன் படைத்தவை. அ

தன் மூலம் மீன்களை அதன் வழியில் இருந்து மாற்றவும், தேவையான இடங்களில் நிறைய மீன்களை ஒன்றாக சேர்க்கவும் முடியும்.


இது கடல் சார்ந்த ஆராய்ச்சிகளில் பெரிய மைல்கல்லாக இருக்கும் என கருதப்படுகிறது.

இது இன்னும் சில நாட்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த எல்.எஸ்.ஆர்.ஓ. நிறுவன விஞ்ஞானிகள் கடந்த 5 ஆண்டுகளாக தீவிர முயற்சி செய்து உருவாக்கியுள்ளனர்.

கடல் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த அந்த நிறுவனம் மீன்களுக்கு நண்பனாக இருக்கும் வகையிலும், மனிதர்களுக்கு உதவும் வகையிலும் ஒரு ரோபோவை உருவாக்க முடிவு செய்து இதைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு வேளை தப்பி தவறி இதை நீங்கள் விழுங்கி விட்டால், படும் அவஸ்தை சொல்லி மாளாது. உயிருடன் இருக்கும் மீன்களை போல அல்ல. உங்க ஜீரண மண்டலத்தைய சிதைத்து விடும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!