பின்லாந்தில் இப்படியும் ஒரு பள்ளி ஆசிரியரா..? மகிழ்ச்சியில் குழந்தைகள்..!


பின்லாந்தின் தென் பகுதியில் டேம்பர் என்ற நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு தொடக்க பள்ளியில் ‘ரோபோ’க்கள் ஆசிரியர்களாக பணிபுரிகின்றன.

இங்கு இவை மொழி ஆசிரியராக உள்ளன. இவற்றால் 23 மொழிகளை புரிந்து கொண்டு கற்பிக்க முடியும். ஆனால் தற்போது இவை ஆங்கிலம், பின்னிஸ் மற்றும் ஜெர்மன் மொழிகள் மட்டுமே கற்றுத்தருகின்றன.

பள்ளி குழந்தைகள் கேட்கும் கேள்விகளை புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் திருப்தி தரும் பதில்களை அவை அளிக்கின்றன. அதற்கேற்ற வகையில் அதில் செயலிகள் பொருத்தப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவது மட்டுமின்றி அவர்களுடன் சேர்ந்து ‘கங்னம்‘ ஸ்டைலில் நடனம் ஆடியும் மகிழ்விக்கின்றன. இந்த ரோபோவுக்கு ‘எலியாங்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ‘ரோபோ’க்கள் ஆசிரியைகளுடன் பணிபுரிகின்றன. ஒரு கருவியான ‘ரோபோ’ வகுப்பறையில் மாணவர்களுக்கு வித்தியாசமாக கல்வி கற்று தருகிறது என மொழி ஆசிரியை ரிகா கொழுங்சாரா தெரிவித்தார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!