கிம் ஜோங் உன் சீனாவிற்கு திடீர் ரகசிய பயணம்… ஏன் தெரியுமா..?


உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி அணு ஆயுத சோதனை, கண்டம் கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனை உள்ளிட்டவைகளை நடத்தி உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்துவதை வடகொரியா வாடிக்கையாக கொண்டுள்ளது. வடகொரியாவின் அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஐநா பல்வேறு பொருளாதார தடைகளை அந்நாட்டுக்கு எதிராக விதித்துள்ளது. அதேபோல், அமெரிக்காவும் வடகொரியாவின் அடாவடி செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளது.

டொனால்டு டிரம்பை சந்திக்க ஆர்வம்

இந்த நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க ஆர்வம் தெரிவித்து இருந்ததாகவும், வடகொரிய அதிபரின் கோரிக்கைக்கு டொனால்டு டிரம்ப் ஒப்புதல் தெரிவித்து இருப்பதாகவும் தென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் யூயி யோங் தெரிவித்தார். அமெரிக்க அதிபரை சந்தித்து அழைப்பு விடுத்த பிறகு இந்த தகவலை யோங் வெளியிட்டார். அடுத்த மாதத்திற்குள் இரு தலைவர்களின் சந்திப்பு நடைபெறும் என கூறப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு எங்கு நடைபெறும் என்ற தகவல் வெளியாகவில்லை.

இந்தநிலையில் கிம் ஜாங் உன், திடீரென சீனாவிற்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,


சீனாவிற்கு திடீர் ரகசிய பயணம்

வட கொரிய அதிபர் ரகசியமாக சீனா வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு வட கொரிய அதிபராக பொறுப்பேற்ற பின் நாட்டை விட்டு கிம் ஜாங் உன் எந்த செல்லவில்லை. தற்போது முதன் முறையாக சீன வந்துள்ளார். அங்கு சீன அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் டிரம்ப், மூன் ஜெயியுடன் வட கொரிய அதிபர் சந்திப்பு

முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப், தென் கொரிய அதிபர் மூன் ஜெயி ஆகியோரை சந்திக்க உள்ள நிலையில் கிம் ஜாங் உன் இந்த சீன பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!