கர்ப்பப்பை புற்றுநோயில் இருந்து உயிர் பிழைத்த பெண் – அமெரிக்காவில் விசித்திரம்..!


அமெரிக்காவில் பெதஸ்டா பகுதியை சேர்ந்த பெண் சூ ஸ்காட் (36). இவர் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

ஹீமோ தெரபி கதிரியக்கம் மற்றும் ஆபரேசன் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளையும் மேற்கொண்டார். இருந்தும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

மேலும் கல்லீரல், பெருங்குடல் மற்றும் கர்ப்பப்பை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளுக்கும் புற்றுநோய் பரவியது. எனவே அவர் விரைவில் மரணம் அடைந்து விடுவார் என அறிவிக்கப்பட்டு அதற்கான நாளும் குறிக்கப்பட்டது.

இந்த நிலையில் சுகாதார கிளினிக்கல் சென்டர் தேசிய நிறுவன ஆஸ்பத்திரியில் ஸ்காட் மீண்டும் பரிசோதிக்கப்பட்டார். அப்போது ‘டி செல்’ மூலம் நோய் தடுப்பாற்றல் முறையில் அதிநவீன சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து சிறப்பு டாக்டர்கள் குழு இத்தகைய சிகிச்சை நடத்தினார்கள்

இச்சிகிச்சையின் விளைவாக கிருமிகள் அனைத்தும் அழிந்து புற்று நோய் குணமானது. இதனால் சாவின் இறுதி விளிம்பு வரை சென்ற ஸ்காட் உயிர் பிழைத்தார்.

இந்த அதிநவீன சிகிச்சை விஞ்ஞான உலகின் சாதனையாக கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் சிகிச்சை அளித்து மற்ற புற்று நோய்களையும் குணப்படுத்த முடியுமா? என்ற ஆராய்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக இந்த ஆஸ்பத்திரிக்கு அமெரிக்க அரசு நிதிஉதவி செய்துள்ளது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!