முகப்பரு, கரும்புள்ளிகள், தழும்புகளை மறையச் செய்யும் அற்புதமான மாஸ்க்..!


இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வருவதே சிறந்தது. ஏனெனில் சருமத்தை பாதுகாக்கும் பொருட்டு எவ்வளவு தான் இரசாயனம் கலந்த க்ரீம்களைப் பயன்படுத்தினாலும் அதில் ஒரு பக்கவிளைவு இருக்கவே செய்யும்.

முகப்பரு, கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள் போன்றவற்றை இயற்கை வழிகளில் போக்குவதே உத்தமம்.

இதற்கு நீங்கள் கட்டாயம் செய்து பார்க்க வேண்டிய ஓர் அற்புதமான மாஸ்க் குறித்து இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

01. பேக்கிங் சோடா – சிறிது

02. ஆப்பிள் வினிகர் – 1 தேக்கரண்டி

03. தேன் – சிறிது

04. எலுமிச்சை – ½

தயாரிக்கும் முறை

ஒரு டம்ளரில் பாதி நீரை நிரப்பி, அதில் 1 தேக்கரண்டி ஆப்பிள் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் பேக்கிங் சோடா இட்டு, கலந்து வைத்துள்ள வினிகர் நீர் மற்றும் சிறிது தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்

.உபயோகிக்கும் முறை

முதலில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் சுத்தமான துணியால் முகத்தைத் துடைக்க வேண்டும்.

பின்பு தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவி 5-10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவி பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!