இப்படியும் ஆற்றை சுத்தம் செய்கிறார்களா பெண்கள்..? இந்தோனேசியாவில் விநோதம்..!


ஆறு மற்றும் ஏரி தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தோனேசியாவில் ஒருவினோதமான முறை நடை முறைப்படுத்தப்படுகிறது.

இந்தோனேசியாவில் சுலாவேசி தீவு உள்ளது. இங்கு தினாம் பங் மாவட்டத்தில் உள்ளடங்கிய மீன் பிடி கிராமத்தில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை என்ற புகார் இருந்து வந்தது.

இக்கிராமத்துக்கு அங்குள்ள மன்டர் என்ற ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இது மிகவும் மாசுபட்ட நிலையில் குப்பை கூளங்களாக கிடந்தது. எனவே அவற்றை சுத்தம் செய்ய புது வழி கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி காலி கேன்களை இடுப்பில் கட்டிக் கொண்டு தண்ணீரில் நீந்தியபடி குப்பை கூளங்கள் அகற்றப்படுகின்றன. இந்த முறையில் பெண்கள் தலா 200 காலி கேன்களை இடுப்பில் கட்டியபடி ஆற்றில் நீந்துகின்றனர்.

தினமும் ஒரு மணி நேரம் 4 கி.மீட்டர் தூரத்துக்கு நீந்தி ஆற்று தண்ணீரை சுத்தம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு கேனுக்கு தலா ரூ.450 வீதம் (7 டாலர்) கூலி வழங்கப்படுகிறது. இத்தகைய முறை மூலம் சுத்தம் செய்யப்படும் அந்த தண்ணீர் ஆற்றின் கரையோரம் உள்ள கிணறுகளில் சேமிக்கப்பட்டு பொது மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!