இந்தியாவில் விரைவில் குதூகலப்படுத்த ‘பிகினி’ அணிந்த விமான பணிப்பெண்கள்..!


பிகினி அணிந்து சேவை செய்யும் ஏர் ஹோஸ்டிகளுடன் கூடிய விமான சேவையை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த ‘வியட்ஜெட்’ என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உலக அளிவில் மிக குறைவான கட்டணத்தில் விமான சேவை அளித்து வரும் நிறுவனங்களில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வியட்ஜெட் உள்ளது.
இந்த நிறுவனம் அளித்து வரும் பிகினி ஏர்லைன் என்ற சேவை விரைவில் இந்தயாவுக்கு வரவுள்ளது.

வரும் ஜூலை முதல் வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து தில்லிக்கு இந்த சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வாரத்தில் நான்கு நாட்கள் இரு மார்க்கமாகவும் இந்த சேவையானது செயல்படவுள்ளது.

இரு நாட்டுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் விதமாகவும், 45-வது ஆண்டு தூதரக உறவை கொண்டாடும் விதமாகவும் இந்த சேவை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் பைலட், ஏர் ஹோட்ஸ்டர்ஸ் என பணிப்பெண்கள் அனைவரும் பிகினி அணிந்தவாறு சேவை செய்து பயணத்தை ஒரு உல்லாசமாக மாற்ற இருக்கிறார்கள்.

முன்னதாக, வியாஜெட் நிறுவனம் 2007-இல் தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்த பிகினி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பெரிய அளிவில் இது பயணிகளை ஈர்க்காமல், மாறாக கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.

ஒரு திரைப்படம் பல்வேறு விதமான விமர்சனத்துக்கு உள்ளாகும்போதுதான், அதன் வசூலுக்கும், வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.

அதுபோல், 2012-இல் 23 வயதுக்குஉட்பட்டோர் கால்பந்து போட்டியில் வியட்நாம் அணி, உஸ்பேகிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவி திரும்பியது.

அப்போது வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் பிகினி அணிந்த பணிப்பெண்களுடன் மீண்டும் சேவை தொடங்கியபோது கடுமையான விமர்சனத்துக் உள்ளானது.

ஆனால் அதுவே தற்போது 17 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்று இந்நிறுவனத்தை பிரபலப்படுத்தி இருக்கிறது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!