கருப்பை தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் இதை சாப்பிட்டால் நீங்கும்..!


கருப்பைக்கு கருஞ்சீரகம் என்றார்கள் நம் முன்னோர்கள். கர்ப்பை சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் கருஞ்சீரகத்தின் மூலம் தீர்வு காணலாம் என்பதே இதன் அர்த்தம்.

இப்போதெல்லாம் பல பெண்களுக்கு கர்ப்பையில் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கத் தான் செய்கின்றது.

காரணம் தற்போதுள்ள உணவுப் பழக்கவழக்கங்கள் தான்.

கர்ப்பையில் பிரச்சினை என்ற உடனேயே வைத்தியரிடம் செல்வதுண்டு.

சில வைத்தியர்கள் வித்தியாசமான சிகிச்சை முறைகளையும் பரிந்துரைப்பதுண்டு
.
அதனாலேயே ஒரு சிலருக்கு கருப்பை தொடர்பான பிரச்சினைகள் தீர்வதே இல்லை.


ஆனால், கருஞ்சீரகம் சாப்பிடுவதால் கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மாதவிடாய் பிரச்சினைகள் இருந்தாலோ, பி.சி.ஓ.டி எனும் கருப்பை நீர்க்கட்டிகள் பிரச்னையால் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடி செய்து, அதில் ஒரு தேக்கரண்டியை தேனில் குழைத்து 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, கருப்பை தொடர்பான பிரச்சினைகள் சரியாகும்.

குழந்தைப் பிறந்து நான்கைந்து நாட்கள் கழித்து, கருஞ்சீரகப் பொடியுடன் பனை வெல்லம் சேர்த்து தினமும் ஒரு உருண்டை வீதம் ஐந்து முதல் 10 நாட்கள் சாப்பிடலாம்.

இதனால் குழந்தை பெற்ற பெண்களின் கருப்பையில் ஏற்பட்ட காயம் ஆறும்.

கருஞ்சீரகத்திற்கு உடல் வலியைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. அத்துடன் மழை மற்றும் பனிக் காலங்களில் உடலுக்குத் தேவையான வெப்பத்தையும் கொடுக்கிறது.

சீரகத்தில் உள்ள தைமோக்யூனோன் எனும் வேதிப்பொருள் செரிமானக் கோளாறுகள், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், வளர்ச்சிதை மாற்றக் குறைபாடுகள் போன்றவற்றிற்கும் மருந்தாக அமைகிறது.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!