கொழும்பு மாநகரசபையின் முதல் பெண் முதல்வர் யார் தெரியுமா..?


கொழும்பு மாநகரசபையின் முதலாவது பெண் முதல்வராக, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ரோசி சேனநாயக்க நேற்று மலை பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த மாதம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகரசபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியது. இதையடுத்து அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, ரோசி சேனநாயக்கவை கொழும்பு மாநகர முதல்வராக பிரகடனம் செய்யும் அரசிதழ் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

இதையடுத்து, அலரி மாளிகையில் நேற்று மாலை நடந்த நிகழ்வில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரின் முன்னிலையில், ரோசி சேனநாயக்க கொழும்பு மாநகர முதல்வராகப் பதவியேற்றார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள், ஐதேக முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.-Source: puthinappalakai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!