அமெரிக்காவில் வெடித்தது மாணவர் புரட்சி – துப்பாக்கிக்கு எதிராக களமிறங்கிய மாணவர்கள்..!


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த மாதம் முன்னாள் ஒருவர் நடத்திய துப்பாக்கி தாக்குதலுக்கு 17 மாணவர்கள் பலியாகினர். புளோரிடா துயரமானது அங்கு நடக்கும் ஓராயிரம் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் ஒரு துளிதான். கடந்த 2012-ம் ஆண்டு முதல் தற்போது வரை 7 ஆயிரம் மாணவர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1300 மாணவர்கள் உயிரிழக்கின்றனர். இனியும் பொறுக்க முடியாது என மாணவர்கள் ஒருங்கிணைந்து குரல் எழுப்பியதன் எதிரொலியாக தானியங்கி துப்பாக்கிகள் வாங்குவதற்கு சில கட்டுப்பாடுகளை அதிபர் டிரம்ப் விதித்தார். மேலும், ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்திருக்க அனுமதியும் அளிக்கப்பட்டது.

ஆனால், இதில் திருப்தி அடையாத மாணவர்கள் நேற்று காலை பள்ளி வகுப்புகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். ஒன்று அல்லது இரண்டு பள்ளிகளில் அல்ல அமெரிக்கா முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவு கட்ட ஒன்று திரண்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.

துப்பாக்கி தாக்குதலுக்கு எதிரான பதாகைகளை ஏந்திக்கொண்டு ஊர்வலமான சென்ற அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் மாணவர்களுக்கு ஆதரவாக திரண்டனர். இதற்கிடையே, துப்பாக்கி தாக்குதல்களில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் வண்ணம் அமெரிக்க பாராளுமன்றத்தில் சிறப்பு சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக துப்பாக்கி தாக்குதல்களில் பலியான சுமார் 7 ஆயிரம் பேரின் காலணிகள் வெள்ளை மாளிகையின் வெளியே வைக்கப்பட்டு துப்பாக்கிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடக்கும் போது இரங்கல் தெரிவிக்கும் அமெரிக்க பாராளுமன்றம் துப்பாக்கிகளை கட்டுப்படுத்த தவறி விட்டது என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இத்தனை காலம் இல்லாமல் மாணவர்கல் ஒன்றினைந்து கிளர்ந்துள்ளது அமெரிக்க அரசியலில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!