காத்மண்டுவில் விபத்தில் சிக்கிய வங்க தேச பயணிகள் விமானம்… 71 பேர் நிலை என்ன?


பங்களாதேஷ் பயணிகள் விமானம் நேபாள தலைநகர் காட்மாண்டுவில் தீ பிடித்து விபத்துக்குள்ளானது.

பங்களாதேஷ் பயணிகள் விமானம் நேபாள தலைநகர் காட்மாண்டு திரிபுவன் சர்வதேச விமானநிலையத்தில் தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.

விமானம் தரையிரங்கும் சமயத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான ஓடுதளத்தில் இருந்து கட்டுப்பாட்டை இழந்த விமானம் அருகிலுள்ள கால்பந்து விளையாட்டு மைதானத்துக்குள் நுழைந்துள்ளது.

இந்நிலையில், விமானத்தில் மொத்தம் 71 பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக 17 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததுள்ளதாக நேபாள சுற்றுலா துறை இணை செயலாளர் சுரேஷ் ஆஜாரியா கூறியுள்ளார்.

மீதமுள்ள பயணிகள் விபத்தில் பலியாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையே தீ பற்றி எரியும் பகுதிகளை அணைக்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய யு.எஸ்-பங்ளா இந்த விமானம் பங்ளாதேஷ் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!