கணவனுக்காக இப்படியுமா..? தினமும் கண்ணீர் வடிக்கும் இளம்பெண்..!


ரஷ்யாவில் சார்ட் டைம் மெமரி லாஸ் (Short time memory loss) நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண், தினமும் தனது கணவன் பிரிந்து சென்றதை எண்ணி கண்ணீர் வடிக்கும் சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த வெரோனிகா(29) என்ற இளம்பெண் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஒரு விதமான போர்பிர்யா நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக, இவர் மேற்கொண்ட அறுவை சிகிச்சை தோல்வியடைந்த நிலையில், நோய் தீவிரமடைந்து, இவரது உடல்பாகம் செயலற்று போனது மற்றும் ஷார்ட் டைம் மெமரி லாஸ் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவரின் கணவர், அவரைப் பிரிந்து சென்று விவாகரத்து பெற்றுக்கொண்டார். ஆனால் மெமரி லாஸ் நோயால் பாதிக்கப்பட்ட வெரோனிகா தினமும் இதை மறந்துவிடுகிறார்.


இதனால், தினமும் தனது கணவர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார், அவர் திரும்பி வந்து விடுவார் என்ற ஏக்கத்திலேயே, அவர் காத்திருக்கிறார். பின்னர், காத்திருக்கும் வெரோனிகாவிடம் அவரது தாய், வெரோனிகாவின் கணவர் பிரிந்து சென்று விட்டார் என்பதை தினமும் கூறுகிறார். இதைக் கேட்கும் வெரோனிகா அதை தாங்க முடியாமல் அழுகிறார். இந்த சம்பவம் தினமும் நடைபெறுகிறது.

விரும்பும் ஒருவர் பிரிந்து செல்வது என்பது மிகவும் கொடுமையானது. ஆனால், அந்த வலியை வெரோனிகா தினமும் அனுபவிப்பது அனைவரையும் சோகமடைய செய்துள்ளது. மேலும், இந்த செய்தியைக் கேட்ட பலரும், வெரோனிகா தனது கணவரை பிரிந்து வந்துவிட்டதாக தெரிவிக்குமாறு அவர் தாயிடம் கூறுகின்றனர். இவ்வாறு கூறினால், அவரின் சோகம் குறையலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!