முகத்திலுள்ள அசிங்கமான ரோமங்களை நீக்க உதவும் வீட்டு வைத்திய முறைகள்..!


முகத்தில் முடி இருப்பது ஆண்மைக்கு அழகு. ஆண்மையை உணர்த்துவதில் முகத்தில் வளரும் முடிக்கு பெரும்பங்கு உண்டு என்று கூற முடியும். ஆனால் சில பெண்களுக்கும் முகத்தில் முடி வளர்வதுண்டு.

அது அவர்களை வெட்கித் தலை குனிய வைப்பதோடு பார்ப்பதற்கு அழகாகவும் தென்படாது.

அப்படிப்பட்ட பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று முடியை அகற்றுவதில் அக்கறை செலுத்துவர்.

ஆனால், அழகு நிலையங்களுக்குச் செல்லாமலேயே முகத்தில் உள்ள முடியை அகற்ற முடியும்.
அது எப்படி எனக் கேட்கின்றீர்களா?


01. கஸ்தூரி மஞ்சளை அரைத்து பாலாடை கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் உதிரும்.

02. பப்பாளிக்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும்.

03. பயறு தோலை பசும் பாலில் கலந்து, அதனுடன் எலுமிச்சைசாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.


04. மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.

05. குப்பமேனி இலையின் சாற்றை எடுத்து தினமும் முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.

06. மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவு ஆகிய இரண்டையும் சமஅளவில் எடுத்து தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் முடி உள்ள இடங்களில் பூசி அப்படியே காய விடுங்கள். நன்றாக காய்ந்த பின்னர் முடி முளைத்திருக்கும் திசைக்கு எதிர் திசையாக கையால் மெதுவாக சுரண்டி எடுக்க வேண்டும். பின்னர் முகத்தை நன்றாக கழுவி விடவும்.

மேலே குறிப்பிட்டவற்றை செய்தால் முகத்தில் முடி வளரும் பிரச்சினை குறையும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!