கர்ப்பிணிகள் பேரீச்சம்பழத்தை உண்பதால் என்ன நன்மைகள் தெரியுமா..?


பேரீச்சம்பழம் என்பது சத்துக்கள் நிறைந்த பழ வகைகளில் ஒன்றாகும். இந்த பேரீச்சம்பழத்தை பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை உண்ணலாம். எனினும் இந்த பேரீச்சம்பழத்தை கருவுற்றுள்ள தாய்மார்கள் உண்பது சரியா?

இதற்கு ஆம் என்று தான் கூற வேண்டும். ஆம், பேரீச்சம்பழத்தில் உள்ள பல்வேறு வகையான சத்துக்கள் தாய்க்கு மட்டுமின்றி வயிற்றில் வளரும் குழந்தைக்கும் இன்றியமையாதது.

கருவுற்ற தாய் ஒருவர் பேரீச்சம்பழத்தை உண்பதால் என்னென்ன நன்மைகள் கிட்டுகின்றன எனப் பார்ப்போம்.


01. சக்தி
பொதுவாகவே கர்ப்ப காலத்தில் அதிகளவு சக்தி தேவைப்படும். அதற்கு தினமும் ஒரு கைப்படி அளவு பேரீச்சம்பழங்களை உண்பதால் தாய்க்கு தேவையான சக்தி கிடைப்பதோடு உடல் எடை கூடாமல் அதே சமயம் சக்தியும் அதிகரிக்கின்றது.

02. மலச்சிக்கலை தடுக்கிறது
பேரீச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்து சமிபாட்டுத் தொகுதியை பாதுகாப்பதோடு கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கிறது.


03. அமனோ அமிலங்களை உருவாக்குகின்றது
பேரீச்சம்பழத்தில் உள்ள புரோட்டீன்கள் கர்ப்ப காலத்திற்குத் தேவையான அமினோ அமிலங்களை உருவாக்குவதில் வல்லமை படைத்தது.

04. பிறப்பு குறைபாடுகளை தடுக்கிறது
பேரீச்சம்பழத்தில் உள்ள ஃபோலேட், மூளை மட்டும் முள்ளந்தண்டு வடத்தில் குறைகள் ஏற்படாது தடுத்து பிறப்பு குறைபாடுகள் ஏற்படுவதை தடுக்கின்றது.


05. இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கின்றது
பேரீச்சம்பழத்தில் உள்ள இரும்புச் சத்தானது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதரிகரிக்கச் செய்கின்றது. இதன் மூலம் இரத்த சோகை தடுக்கப்படுகின்றது.

எனவே கர்ப்பிணிகளே! போதுமான அளவு பேரீச்சம்பழத்தை உண்ணுங்கள், பலன் பெற்றிடுங்கள்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!