பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு மனைவி பகீர் குற்றச்சாட்டு..!


ஏபிபி லைவ் வெளியிட்ட ஒரு செய்தியின் படி , இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முமகது ஷமியின் மனைவி ஹஸின் ஜஹான் தனது பேஸ்புக்கில் முகமது ஷமியின் உறவினர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தொடர்ச்சியாக பகிர்ந்து வருகிறார். இதில் ஷமி பல்வேறு பெண்கள் மற்றும் அவருடன் பேசிய அரட்டைகளை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அந்த டிவிக்கு அளித்த பேட்டியில் எனது பகிர்வுகள் பனிப்போர் முனைதான். ஷமியின் நடவடிக்கைகள் கொடூரமானவை அவர் பல பெண்களுடன் உறவு வைத்துள்ளார்.

ஜஹான், 2014 டில்லி டேர்டெவில்ஸின் தொலைபேசி வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். ஷாமியின் பிஎம்டபிள்யூ காரில் ஆண் கருத்தடை சாதனத்துடன் சேர்ந்து தொலைபேசியைக் கண்டுபிடித்ததாக கூறி உள்ளார்.

ஷமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.


அவர்களது குடும்பத்தினர் அனைவரும் என்னை சித்திரவதை செய்தனர். அவரது தாயும் சகோதரரும் என்னை துஷ்பிரயோகம் செய்தார்கள். காலை 2-3 மணி வரை சித்திரவதை தொடர்கிறது. அவர்கள் என்னை கொல்ல விரும்புகிறார்கள் என ஜஹான் குற்றஞ்சாட்டினார்.

ஷமி தென் ஆப்ரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு என்னை அடிக்கத் தொடங்கினார்.

என் குடும்பம் மற்றும் மகளின் காரணமாக என்னை நானே சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் அவர் என்னை தொடர்ந்து தொந்தரவு செய்தார். அநேக பெண்களுடனான அந்த அசாதாரண அரட்டைகளை நான் கண்டபோது, உடைந்து போனேன். இனி இதை சகித்துக் கொள்ள முடியாது, மேலும் எல்லா ஆதாரங்களுடனும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்தேன்.

ஜனவரி 8-ம் தேதி கொல்கத்தாவுக்கு திரும்பிய ஜஹான் ஜடாவ்பூர் காவல்துறைக்கு இந்த நிலைமை பற்றி வாய்மூலமாக தகவல் கொடுத்துள்ளார்.

ஒரு பதிவில் அந்த் பெண்ணின் பெயர் மஞ்சு மிஸ்ரா என்றும், இவர் நாக்பூரில் வசிக்கிறார். அவர் பற்றி தெரியுமா என கேட்டு உள்ளார்.


மற்றொரு பதிவில் இந்த பெண் சபனாஸ், சம்பாவை சேர்ந்தவர். இவர் முகமது ஷமியின் கேர்ள் பிரண்ட் என குறிப்பிட்டு உள்ளார்.

மனைவியின் இந்த குற்றச்சாட்டு குறித்து ஷமி இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை.

ஷமி தற்போது இந்தியா ஏ அணி சார்பாக தியோதர் டிராபிக்காக விளையாடி வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2013–ம் ஆண்டு இந்திய அணிக்குள் அடியெடுத்து வைத்தார். இதுவரை 22 டெஸ்டில் விளையாடி 76 விக்கெட்டுகளும், 47 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 87 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ள முகமது ஷமி, உத்தரபிரதேசத்தில் பிறந்து, பெங்கால் அணிக்காக விளையாடி வருபவர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!