அட கடவுளே! ராணுவ பட்ஜெட்டை அதிகரித்த சீனா… எவ்வளவு தெரியுமா..?


ராணுவத்திற்கு அதிக நிதி செலவு செய்து ராணுவத்தை நவீனப்படுத்தும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது. புதிய நீர்மூழ்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள் என தன் வலிமையை தொடர்ந்து அதிகரித்து வரும் சீனா, இதற்கான செலவினத்தை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில், ராணுவத்துக்கு 150.5 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இது முந்தைய ஆண்டை விட 7 சதவீதம் அதிகம்.

இந்நிலையில், இந்த ஆண்டு தனது ராணுவ பட்ஜெட்டை மேலும் 8.1 சதவீதம் உயர்த்தி உள்ளது. தேசிய மக்கள் காங்கிரசில் (தேசிய சபை) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ராணுவத்துக்கு 175 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவின் இந்த பட்ஜெட்டானது இந்தியாவின் ராணுவ பட்ஜெட்டைவிட மூன்று மடங்கு அதிகம் ஆகும். இந்தியா இந்த ஆண்டு ராணுவத்துக்கு 52.5 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற பெரிய நாடுகளை ஒப்பிடுகையில், சீன அரசாங்கம் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தேசிய நிதிச் செலவில் இருந்து குறைந்த பங்கையே ராணுவ பட்ஜெட்டிற்கு எடுத்துகொண்டிருப்பதாக தேசிய மக்கள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!