விஜய் சேதிபதியின் தம்பியாக நடித்த கதிர் சஞ்சனாவை கரம்பிடித்தார்..!


மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கதிர். அவரது நடிப்பில் அடுத்ததாக கிருமி, என்னோடு விளையாடு,விக்ரம் வேதா உள்ளிட்ட படங்கள் ரிலீசாகின. இந்நிலையில், கதிர் தற்போது `சிகை’, `சத்ரு’, `பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதில் `சிகை’ வருகிற ஏப்ரல் மாதம் ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில், கதிருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் சஞ்சனாவுக்கும் ஈரோட்டில் நேற்று திருமணம் நடந்தது. திருமணத்தில் இயக்குநர் அட்லி, ப்ரியா அட்லி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாத இறுதியில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவும் கதிர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கதிர் – சஞ்சனா தம்பதிகளுக்கு திரையுலகின் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் நடிகர் ரமேஷ் திலக்குக்கும், ரேடியோ ஜேக்கியான ஆர் ஜே நவலட்சுமிக்கும் சென்னையில் வைத்து நேற்று திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!