விவாகரத்திற்காக நீதிமன்றத்திற்கு வந்த தம்பதிகள்… காரணத்தைக் கேட்ட நீதிபதி அதிர்ச்சியில்…!


இந்தியாவில் மனைவியின் சமையல் சுவையாக இல்லை எனக் கூறி, கணவர் விவாகரத்து கோரியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை சாண்டாகுரூஸ் பகுதியைச் சேர்ந்த கணவர் ஒருவர் மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில் என்னுடைய மனவி பணிவாக நடந்து கொள்வதில்லை எனவும், என் பெற்றோர் காலையில் அவளை சீக்கிரமாக எழுப்பினால், திட்டுகிறாள்.

வேலைக்கு சென்று வரும் மாலை 6 மணிக்கு வந்தவுடன் தூங்கிவிடுகிறார். அதன் பின் பொறுமையாக 08.30 மனிக்கு எழுந்து சமைக்கிறார்.


இது பரவாயில்லை என்று பார்த்தால், அவர் சமைக்கும் சமையல் சுவையாக இருப்பதே இல்லை. சாப்பாடும் குறைவாக சமைக்கிறார்.

நான் வேலைக்கு சென்று திரும்பினால் ஒரு டம்ளர் தண்ணீர் கூட தருவதில்லை, இதனால் இந்த கொடுமைகளிலிருந்து அவளிடம் தப்பிக்க வேண்டும் என்றால் விவாகரத்து ஒன்று தான் தீர்வு, அதனால் தனக்கு மனைவியிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று கோரியுள்ளார்.

இது குறித்து மனைவி செய்துள்ள பதில் மனுவில், தனது கணவர் கூறுவது அனைத்தும் பொய், நான் நன்றாகவே சமைக்கிறேன், அவர்கள் தான் என்னை கீழ்த்தனமாக நடத்துகிறார்கள் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சுவையாக சமைப்பதில்லை என்பவையெல்லாம் கொடுமைப்படுத்துவது கிடையாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடிசெய்தார். – Source : lankasee.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!