கருமையான கழுத்தை 15 நிமிடத்தில் அழகாக்க ஒரு பீச் பழம் போதும்..!


இன்றைய அவசர உலகில் வேலைக்குச் செல்லும் யுவதிகளுக்கு நேரம் போதாமல் இருக்கும் காரணத்தால், ஒழுங்கான உணவுப்பழக்க வழக்கங்கள் இன்றி துரித உணவு வகைகளை உண்ணும் பழக்கத்திற்கு இவர்கள் அடிமையாகி விட்டார்கள்.

இதனால், ஆரோக்கியம் மட்டுமின்றி அழகும் இல்லாமல் போகின்ற நிலை தோன்றியுள்ளது. அதனால் அழகு நிலையங்களுக்கு அடிக்கடி போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்றாலும், முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் கழுத்துக்கு கொடுப்பதில்லை. அழகையும் தோற்றத்தையும் இன்னும் நேர்த்தியாக வைக்க ஆசைப்பட்டால், கழுத்திற்கும் பராமரிப்பு தர வேண்டும். இல்லையெனில், முகம் ஒரு நிறமும் கழுத்து ஒரு நிறமும் வேறுபட்டு காண்பிக்கும். ஆகவே கழுத்தினை பராமரிப்பது அவசியம். அதுசரி, கழுத்தை எப்படி அழகாக காண்பிக்கலாம் என பார்க்கலாமா?


01. விட்டமின் ஈ
விட்டமின் ஈ கேப்ஸ்யூலை அல்லது க்ரீமை எடுத்து தினமும் இரவு தூங்கும் போது கழுத்தில் தடவி கீழிருந்து மேல்நோக்கி மசாஜ் செய்யுங்கள். இதனால் கழுத்தில் சதை தொங்காமலும் சுருக்கங்கள் இல்லாமலும் அழகான கழுத்தை பெறுவீர்கள்.

02. ஸ்கிரப்
கழுத்தில் வியர்வை அதிகம் சுரக்கும் என்பதால் கருமைடைவதும் அதிகம். அதனால் ஸ்கிரப் செய்வது அவசியம். அதுவும் பின்னங் கழுத்தில் கட்டாயம் ஸ்கிரப் செய்ய வேண்டும். இதனால் இறந்தசெல்கள் அழுக்குகள், வியர்வை ஆகியவை நீக்கப்படும். சுருக்கங்கள் வராது.


03. முட்டைப்பேக்
முட்டையின் வெள்ளைக் கருவில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து, கழுத்தில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து, கழுவவும். இதனால் இரட்டை நாடி, மற்றும் தொங்கும் சதை வராமல் இறுகி, உங்கள் கழுத்து அழகு பெறும்.

04. பீச்பழம், யோகர்ட் பேக்
பீச் பழத்தை மசித்து, அதன் சாறினை எடுத்து, அதில் தேன் மற்றும் யோகர்ட் சேர்த்து நன்றாக கலக்கவும். இதனை கழுத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவினால், கழுத்திலுள்ள கருமை போய், சுருக்கங்கள் நீங்கி கழுத்து அழகு பெறும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!