உறவு வைத்து கொண்டால் மட்டுமே சாப்பாடு – சிரிய பெண்களுக்கு இப்படி ஒரு அவலமா..?


சிரியா உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் உடலுறவு வைத்தால்தான் மருத்துவம், சாப்பாடு உள்ளிட்ட உதவிகள் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கவுடா நகரை மீட்பதற்காக சிரிய அரசு, ராணுவ தாக்குதல் நடத்தி கொண்டிருக்கிறது. இந்த தாக்குதல் காரணமாக கடந்த 11 நாட்களில் மட்டும் 900 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த போரில் குழந்தைகள்தான் அதிகம் இறந்துள்ளனர். இந்த நேரத்தில் ஐநாவால் அனுப்பி வைக்கப்பட்ட உதவி குழு அங்கு இருக்கும் மக்களுக்கு உதவி செய்து வருகிறது.

இதில் ஐநா உதவி குழுவை சேர்ந்த ஆண்கள், போரினால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் உடலுறவு வைத்து கொண்டால் மட்டுமே மருத்துவம், சாப்பாடு உள்ளிட்ட உதவி செய்வதாக தெரிவித்துள்ளனர். இதனால் சிரிய பெண்கள் எவரும் உதவி பெற வருவதில்லை. மேலும் அங்கிருக்கும் பெண்களிடம் உதவிகுழுவை சேர்ந்த ஆண்கள், எங்களை திருமணம் செய்து கொண்டால் உங்கள் குடும்பத்தை காப்பற்றுவதாக கூறி அவர்களை திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஐநாவால் அனுப்பி வைக்கப்பட்ட ஆண்கள் யாரும் இந்த செயலை செய்யவில்லை என ஐநா அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.-Source: virakesari.lk

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!