சிரியாவில் 2012 – 2018 வரை சுமார் எத்தனை லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் தெரியுமா?


பூமியின் நரகம் என அழைக்கபடும் சிரியாவில் 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 5 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் நடக்கும் போரில் தற்போது வடகொரியாவும் களம் இறங்கி இருக்கிறது.

இரண்டு வருடமாக மறைமுகமாக இதில் செயல்பட்டு வந்ததாக தற்போது குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது.

கடந்த 48 வருடங்களில் வேலை இல்லா திண்டாட்டம், போதிய மருத்துவ வசதி, உணவு பற்றாக்குறை என மூன்றாம் தர நாடாக சிரியா மாறி இருந்தது.

இருப்பினும் பிரிவினையை தூண்டும் செயல்களில் மட்டுமே அரசு மொத்த கவனத்தையும் வைத்திருந்தது, இதனால் கிளர்ச்சியாளர்கள் பெருகினர்.

கிளர்ச்சியாளர்களை நசுக்கும் வேலையில் இறங்கிய ஆசாத் அரசுக்கு உதவியாக ரஷ்ய உள்ளிட்ட வல்லரசுகள் களமிறங்கியுள்ளது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது.

சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக. கடந்த 9 நாட்களில் மட்டும் 900-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், போர் உக்கிரம் அடைந்த 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 5 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த போரில் தடை செய்யப்பட கெமிக்கல் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக குளோரின் மூலக்கூறுகள் மூலம் இது செய்யப்படுகிறது.

இது கீழே தரையில் குறிப்பிட்ட வேகத்தில் பட்டவுடன் குளோரின் புகையை வெளியிடும். அதே சமயம் மோசமான சத்தத்துடன் நெருப்பும் உருவாகும்.

இந்த குண்டுகள் சிரியா போரில் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிகுறியுடன் பலர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை இந்த அறிகுறி கொண்டு 9 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

இன்னும் அங்கு நிறைய பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கெமிக்கல் குண்டுகள் வடகொரியா மூலம் சிரியாவிற்கு கிடைத்து இருக்கிறது.

வடகொரியாதான் 12 கப்பல்களில் இந்த குண்டுக்கான பொருட்களை வழங்கி இருக்கிறது. இது குறித்து அமெரிக்க பத்திரிக்கைகளை விரிவாக எழுதி இருக்கிறது.

வடகொரியா 2015ல் இருந்தே இந்த குண்டுகளை அனுப்பி வைத்துக் கொண்டு இருக்கிறது. 2013ல் சிரியாவின் அனைத்து விதமான கெமிக்கல் குண்டுகளும் அழிக்கப்பட்டது.

அதன்பின் புதிதாக வடகொரியா இப்படி உதவி செய்து இருக்கிறது. இந்த குண்டுகளில் காணப்படும் பல முக்கியமான வேதிப்பொருட்கள் வடகொரியா குண்டுகளால் காணப்படுவதாக கூறப்படுகிறது.

அமெரிக்க படை மிதவாத போராளிகளுக்கு உதவுவதால், வடகொரியா அதற்கு எதிரான நிலையை எடுத்து இருக்கிறது. இதுதான் நிறைய குழந்தைகளின் உயிரை பலிவாங்கி இருக்கிறது.

இந்த குண்டுகள் ஜநாவால் தடை செய்யப்பட்டு இருக்கிறது. ஈராக் போரிலும், இலங்கை போரிலும் இந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வந்து இருக்கிறது.

தற்போது சிரியா அரசும், ரஷ்யா அரசும் இந்த குண்டுகளை பயன்படுத்தி வருகிறது. இந்த குண்டுகளை பயன்படுத்தினால் மோசமாக மூச்சு அடைப்பு ஏற்படும். சரியாக சுவாசிக்க முடியாது.

கண்கள் எரிய தொடங்கும். மூச்சு குழலை சுற்றி பெரிய படலம் உருவாகும். குழந்தை சில நேரத்தில் மரணம் அடைவார்கள். – Source : dailythanthi.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!