இந்தியா செல்லும் மஹிந்தாவை வரவேற்க காத்திருக்கும் சந்திரபாபு நாயுடு… தமிழர்கள் ஆவேசம்…!


இலங்கையில் நடந்த இறுதிப்போரின்போது லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் ராஜபக்சேவுக்கு ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு வரவேற்பு கொடுக்கவுள்ளது தமிழர்களை கொதிப்படைய செய்துள்ளது.

அண்மையில் இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சேவின் கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அதிபர் சிறிசேனாவின் ஆட்சியே ஆட்டம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெகுவிரைவில் இலங்கையில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ள ராஜபக்சே, அதற்காக வழிபாடு செய்யவே ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தருவதாக கூறப்படுகிறது. – Source : webdunia.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!