கொத்து கொத்தாக செத்து மடியும் பிஞ்சு குழந்தைகள்..! கண்டு கொள்ளாத சர்வதேசம்..!


சிரியாவில் கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக ரஷ்யா ராணுவத்தின் ஆதரவுடன் அரசு படை நடத்தி வரும் கொடூர தாக்குதல்களில் ஏராளமான குழந்தைகள் உட்பட பொதுமக்கள் சுமார் 600 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும், யோர்தானையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது.

இந்நிலையில், சிரியாவில் கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக ரஷ்யா ராணுவத்தின் ஆதரவுடன் அரசு படை நடத்தி வரும் கொடூர தாக்குதல்களில் ஏராளமான குழந்தைகள் உட்பட பொதுமக்கள் சுமார் 600 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதனிடையே கடந்த ஞாயிற்று கிழமை அரசு படையினர் குளோரின் விஷவாயு குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

இதில் பலருக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டு 6 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனியார் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஐநா பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட்டபடி 30 நாள் போர் நிறுத்தத்தை சிரியா உடனே அமல்படுத்த வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்ரஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இதுவரை சிரியாவில் 197 முறை அரசுப்படையினர் ரசாயன குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.-Source: tamil/asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!