நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் – கணவர் போனி கபூரிடம் போலிஸார் தீவிர விசாரணை!!


துபாயில் மர்மமான முறையில் மரணம் அடைந்து இருக்கும் ஸ்ரீ தேயின் மரணம் குறித்து அவரது கணவர் போனி கபூர் மற்றும் ஹோட்டல் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதால், அவரது உடலை இந்தியா கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் பெண் சூப்பர் ஸ்டார் நடிகை என்ற அந்தஸ்துடன் வலம் வந்த கொண்டிருந்த நடிகை ஸ்ரீ தேவி இன்று நம்மிடம் இல்லை. இவரது மரணம் நாட்கள் ஆக ஆக பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரம் தனது உறவினர் திருமணத்திற்கு குடும்பத்துடன் துபாய் சென்று இருந்த ஸ்ரீதேவி, திருமணம் முடிந்து கணவர் மற்றும் அவரது குழந்தைகள் மும்பை திரும்பிவிட, ஸ்ரீதேவி மட்டும் ஷாப்பிங் செல்வதற்காக துபாயில் தங்கி விட்டார். முன்பு இருந்த ஹோட்டலை காலி செய்துவிட்டு, ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸில், அறை எண் 2201ல் தங்கியுள்ளார்.


இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு தனது மனைவிக்கு ஆச்சரிய விருந்து கொடுக்க மும்பையில் இருந்து போனி கபூர் துபாய் சென்றதாகவும், சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்த இவர்கள் ஹோட்டல் செல்ல தயாராகி உள்ளனர். அப்போது குளியறைக்கு சென்று இருந்த ஸ்ரீதேவி மாரடைப்பு ஏற்பட்டு, அங்குள்ள பாத் டப்பில் தவறி விழுந்து இறந்துவிட்டதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

நடிகை ஸ்ரீ தேவியின் ரத்த மாதிரியில் ஆல்கஹால்: தடவியல் அறிக்கையில் தகவல்!!
ஆனால், தடவியல் நிபுணர்கள் நடத்திய சோதனையில், அவரது ரத்தத்தில் ஆல்கஹால் இருந்ததும், எதிர்பாராமல் பாத் டப்பில் தவறி விழுந்து இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நேற்று கலீத் டைம்ஸ் வெளியிட்டு இருந்தது. ஆனால், இந்த சோதனை அறிக்கையில் தனக்கு திருப்தியில்லை என்று தடவியல் இயக்குநர் கையெழுத்திட மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.


ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கி உயிாிழந்ததாக அறிக்கை
பிணவறையில் ஸ்ரீதேவி:
இந்த நிலையில் அவரது உடல் இன்னும் பிணவறையில் தான் வைக்கப்பட்டுள்ளது. போனி கபூர் மாற்றும் அவரது குடும்பத்தினர், ஹோட்டல் ஊழியர்களிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது இந்த விசாரணை இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், அவரது உடலை எம்பால்மிங் செய்ய அனுமதி கிடைக்கவில்லை. மேலும் ஒரு தடையில்லா சான்றிதழ் கிடைத்த பின்னரே அவரது உடல் எம்பால்மிங் செய்ய அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

போனி கபூரிடம் தீவிர விசாரணை:
ஏன் போனி கபூர் இந்தியாவுக்கும், துபாய்க்கும் சென்று வந்து கொண்டு இருந்தார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு அரசு வழக்கறிஞருக்கு மாற்றப்பட்டதால், போனி கபூர் மற்றும் ஹோட்டல் ஊழியர்களிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. சமீபத்தில் திருமணம் நடந்த போனி கபூர் உறவினர் மோஹித் மார்வாவிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


போனி கபூர் எப்போது இந்தியா வரமுடியும்:
விசாரணை முடிந்த பின்னர்தான் போனி கபூர் இந்தியா வர முடியும். அதுவும் அந்த நாட்டின் அரசு வழக்கறிஞர்கள் அனுமதித்த பின்னர், விசாரணை முடிந்த பின்னர் வர முடியும். இந்த விசாரணையில் சந்தேகம் ஏற்பட்டு, ஸ்ரீதேவியின் உடலை மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் மீண்டும் உடற்கூறு ஆய்வு நடைபெறும். இறப்பதற்கு முன்பு யாருடனெல்லாம் ஸ்ரீதேவி பேசி வந்தார் என்பதும் குறித்தும் அவரது செல்போனில் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

துபாயைப் பொறுத்த அளவில், வெளிநாட்டினர் அவர்களது நாட்டில் இறக்கும்பட்சத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டுதான் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவிடம் தகவல் சேகரிப்பு:
மேலும், இதுவரை ஸ்ரீதேவி எடுத்துக் கொண்ட மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் குறித்த அறிக்கைகளையும் இந்தியாவிடம் துபாய் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் எதுவும் பாதிப்பு இருக்குமா என்ற ரீதியில் விசாரித்து வருகின்றனர்.

துபாயைப் பொறுத்த வரை இறப்பு சான்றிதழை அராபிய மொழியில்தான் கொடுப்பார்கள். அதனுடன் இணைத்து ஆங்கில பிரதியும் கொடுக்கப்படும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கான இந்திய தூதரகம் செய்துள்ள டுவீட்டில், ”அனைத்து நடைமுறைகளும் முடிய இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆகும். தொடர்ந்து நாங்கள் ஸ்ரீதேவியின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம். முடிந்த வரை அவரது உடலை விரைவில் இந்தியா கொண்டு வர முயற்சித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!