ஸ்ரீதேவியின் மரண செய்தியை கேட்டு மும்பையில் குவிந்த ரசிகர்கள்!


நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தைத் தொடர்ந்து அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்கு ஜூஹூ பகுதியில் ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் மோஹித் மார்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை ஸ்ரீதேவி தன்னுடைய குடும்பத்தினருடன் துபாய் சென்றிருந்தார். திருமணம் முடிந்த பிறகு ஷாப்பிங் என்று சொந்த வேலைகளுக்காக ஹோட்டல் அறையில் தங்கியிருந்தார். ஆனால், அப்போது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். ஸ்ரீதேவியின் திடீர் மரணம் திரை பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என்று அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடல் நேற்று துபாயிலிருந்து மும்பை கொண்டு வரப்படுவதாக தகவல் வந்தது. ஆனால், சில நடைமுறைகள் முடியாமல் இருந்ததால், இன்று தனி விமானம் மூலம் துபாயிலிருந்து மும்பை கொண்டு வரப்படுகிறது. அங்கு சிறிது நேரம் குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஜூஹூ பகுதியில் உள்ள பவன் ஹான்ஸ் இடுகாட்டில் அவருக்கு இறுதிச்சடங்கு செய்யப்படவுள்ளது. அவரது உடலை எப்படியாவது பார்த்தாகவேண்டும் என்ற ஆசையில் அவரது ரசிகர்கள், மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன்பு திரண்டுள்ளனர். ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக போனி கபூரின் முதல் மனைவியின் மகன் அர்ஜூன் கபூர் மும்பை வந்துள்ளார். இவ்வளவு ஏன் ஸ்ரீதேவியின் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் ரஜினிகாந்தும் மும்பை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!